Neobanking என்ற வங்கி தளத்தை இந்தியாவில் தொடங்கும் எஸ்பிஎம் பேங்க்

2019 ஜனவரியில் ரிசர்வ் வங்கியில் வங்கி உரிமம் பெற்ற இந்தியாவின் முதல் வெளிநாட்டு வங்கி இதுவாகும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2020, 03:59 PM IST
Neobanking என்ற வங்கி தளத்தை இந்தியாவில் தொடங்கும் எஸ்பிஎம் பேங்க் title=

வங்கிச் செய்திகள்: எஸ்.பி.எம் பேங்க் இந்தியா என்ற ஸ்டேட் பாங்க் ஆப் மொரீஷியஸ், தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி, ஒரு புதிய வங்கி தளத்தை தொடங்க உள்ளது. எனவே வாடிக்கையாளர்களை சென்றடைய பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

நாங்கள் புதிய NEO Banking Platform சேவையை தொடங்குகிறோம். நாங்கள் ஒரு ஃபிண்டெக் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறோம், ”என்று எஸ்.பி.எம் வங்கியின் (இந்தியா) தலைமை-சில்லறை மற்றும் நுகர்வோர் பிரிவின் தலைவர் நீரஜ் சின்ஹா ​​கூறினார். மேலும் எங்கள் வங்கி பல பிரிவுகளில் மற்ற வங்கியுடன் இணைந்து வேலை பார்க்கவும் யோசித்து வருகிறோம். எங்களிடம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் இருந்தாலும், ஆனால் வங்கி உரிமம் இல்லை.

“நாங்கள் ஃபிண்டெக் PayNearby மூலம் பைலட் செய்கிறோம். நிவேஷ் (Nivesh) என்ற சேவையை நாங்கள் தொடங்கினோம். இதன்மூலம் பணத்தை சேமித்து வைக்கலாம்" என்று சின்ஹா ​​பிசினஸ்லைனிடம் தெரிவித்தார்.

எஸ்.பி.எம் (State Bank of Mauritius) வங்கி 2019 ஜனவரியில் முழுக்க முழுக்க சொந்தமான துணை நிறுவனமாக செயல்பட இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கி உரிமம் பெற்ற இந்தியாவின் முதல் வெளிநாட்டு வங்கியாகும்.

ALSO READ |  இந்த தவறுகளை செய்தால் உங்கள் பணம் கோவிந்தா.... எச்சரிக்கும் SBI..!

"எங்களுடைய அணுகுமுறை என்னவென்றால், வங்கி உரிமத்துடன் ஒரு ஃபைன்டெக்காக இந்தியாவில் ஒரு வங்கியை உருவாக்க விரும்புகிறோம். மற்ற வெளிநாட்டு வங்கிகளைப் போலல்லாமல், நாங்கள் முழு ஹாக் (Hog) என்ற முறையில் திட்டம் தீட்டினோம். நாங்கள் செய்ய விரும்பிய திட்டமே மிகவும் கடினமான தேர்வாக இருந்தது" என்று சின்ஹா ​​கூறினார்.

இந்த வங்கியில் 8,000 வாடிக்கையாளர்கள் மற்றும் ஏழு வங்கி கிளைகள் மற்றும் ஐந்து ஏடிஎம்கள் உள்ளன. செப்டம்பர் 30, 2020 நிலவரப்படி, அதன் முன்னேற்றங்கள் 9 1,927.06 கோடியாகவும், வைப்புத்தொகை 67 2,673.54,72,00 கோடியாகவும் இருந்தது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News