எச்டிஎஃப்சி ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்: சமீபத்தில் ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் கடன்களுக்கான வட்டி விகிதம் அதாவது ரெப்போ வட்டி விகிதத்தை எந்த மாற்றமும் செய்யாமல் ரெப்போவை 6.5 சதவீதமாக தொடரும் என அறிவித்து இருந்துள்ள நிலையில், தற்போது மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு அற்புதமான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை வங்கி 25 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக HDFC வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி, புதிய FD விகிதம் 9 பிப்ரவரி 2024 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை 3.5% முதல் 7.75% வரை வட்டி வழங்குகிறது. வங்கி 18 மாதங்களில் இருந்து 21 மாதங்களுக்கும் குறைவான ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டியை 7% லிருந்து 7.25% ஆக உயர்த்தியுள்ளது.
* HDFC வங்கியானது 7 முதல் 29 நாட்களில் முதிர்ச்சியடையும் மொத்த FD வைப்புகளுக்கு 3% வட்டியை வழங்குகிறது.
* 30 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் மொத்த FD வைப்புகளுக்கு 3.50% வட்டி கிடைக்கும்.
* 46 நாட்கள் முதல் ஆறு மாதங்களில் முதிர்ச்சியடையும் மொத்த வைப்புகளுக்கு 4.50% வட்டி வழங்கப்படும்.
மேலும் படிக்க | சேமிப்பு கணக்கு இருந்தால் கூட வருமான வரி நோட்டீஸ் வரும்: இதை மட்டும் செஞ்சிடாதீங்க
* ஆறு மாதங்கள், ஒரு நாள் முதல் 9 மாதங்கள் வரையிலான மொத்த FD வைப்புகளுக்கு (FD Interest Rate50 .75% வட்டியை வங்கி வழங்குகிறது.
* ஒரு நாள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில் முதிர்ச்சியடையும் மொத்த FD வைப்புகளுக்கு 6 சதவீத வட்டி கிடைக்கும்.
* ஒரு வருடம் முதல் 15 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 6.60 சதவீத வட்டி வழங்குகிறது.
* 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை ஃபிக்சட் டெபாசிட்டிற்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. வங்கி FD வைப்புகளுக்கு வட்டி விகிதத்தை 18 மாதங்களில் இருந்து 21 மாதங்களுக்கும் குறைவானதாக 25 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது. 7 சதவீதத்தில் இருந்து 7.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* வங்கி 21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் வரை FD வைப்புகளுக்கு 7.15% வட்டியை வழங்குகிறது. இது தவிர, வங்கி 55 மாதங்கள் (4 ஆண்டுகள் 7 மாதங்கள்) FD க்கு 7.20% வட்டி வழங்குகிறது.
* HDFC வங்கி மூத்த குடிமக்களுக்கு FD மீது 50 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி அளிக்கிறது.
* 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD வைப்புகளுக்கு வங்கி 3.5% முதல் 7.75% வரை வட்டி வழங்குகிறது.
* அதிகபட்ச வட்டி விகிதம் 18 முதல் 21 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு 7.75% ஆகும்.
மேலும் படிக்க | ஜாக்பாட் செய்தி: 1% வட்டி விகிதத்தில் PPF-இல் கடன் பெறலாம்... விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ