சேமிப்பு கணக்கு இருந்தால் கூட வருமான வரி நோட்டீஸ் வரும்: இதை மட்டும் செஞ்சிடாதீங்க

Income Tax Rules For Savings Account: சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கென்று சில விதிகள் உள்ளன. இவற்றை மீறினால் வருமான வரித்துறையின் கவனம் நம் மீது திரும்பக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 9, 2024, 01:06 PM IST
  • சொத்தின் ஆவணங்களை வைத்திருங்கள்.
  • உங்கள் சேமிப்பு வங்கிக் கணக்கைப் பயன்படுத்த யாரையும் அனுமதிக்காதீர்கள்.
  • ஒரே பரிவர்த்தனையில் 50,000 ரூபாய்க்கு மேல் பணம் டெபாசிட் செய்வதைத் தவிர்க்கவும்.
சேமிப்பு கணக்கு இருந்தால் கூட வருமான வரி நோட்டீஸ் வரும்: இதை மட்டும் செஞ்சிடாதீங்க

Income Tax Rules For Savings Account: இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் வங்கிக்கணக்கு உள்ளது. வங்கித் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள, சம்பள வர்க்கத்தினர், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒரு சேமிப்பை கணக்கையாவது வைத்துக்கொண்டுள்ளனர். பெரும்பாலும் நிலையான வருமானம் உள்ள அனைவரும் சேமிப்பு கணக்கை துவங்குகிறார்கள். ஏனெனில், இதில் அவர்களுக்கு வட்டியும் கிடைக்கின்றது. 

Add Zee News as a Preferred Source

எனினும் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கென்று சில விதிகள் உள்ளன. இவற்றை மீறினால் வருமான வரித்துறையின் கவனம் நம் மீது திரும்பக்கூடும். வருமான வரித்துறையின் ஐடி செல், அதிநவீன மென்பொருள் மற்றும் உயர்தர வன்பொருள் உதவியுடன், வரி செலுத்துவோர் (Taxpayers) வைத்திருக்கும் அனைத்து வங்கிக் கணக்குகளையும் உன்னிப்பாகக் கண்காணிக்கின்றது. இது நிதி பரிவர்த்தனைகளில் விழிப்புடன் இருக்கவும், இவற்றில் ஏற்படும் முரண்பாடுகளைக் கண்டறியவும் உதவுகிறது.

ஒரு நபர், ஒரு நிதியாண்டில், மொத்தமாக ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்தாலோ அல்லது கணக்கிலிருந்து எடுத்தாலோ, அந்த விவரங்கள் வங்கி மூலம் வருமான வரித்துறைக்கு (Income Tax Department) அனுப்பப்படும். அதன் பிறகு இவற்றில் கவனம் செலுத்தப்படும். 

- வரி செலுத்தும் தனிநபர் தாக்கல் செய்த வருமான வரி தாக்கல் (ITR) அவரது பண பரிவர்த்தனைகளுடன் பொருந்த வேண்டும்.

- தாக்கல் செய்த வருமான வரி அறிக்கை பரிவர்த்தனைகளுடன் பொருந்தவில்லை என்றால், வருமான ஆதாரத்துடன் வருமான விவரங்களைக் கேட்டுத் துறை ஒரு நோட்டீசை (Income Tax Notice) வெளியிடும். நீங்கள் விளக்கிய வருமான ஆதாரம் சரியான ஆவணங்களுடன் உண்மையானதாக இருந்தால், நோட்டீஸ் தள்ளுபடி செய்யப்படலாம். ஆனால் நீங்கள் அளித்த விளக்கங்கள் வருமான வரித் துறைக்கு ஏற்கும் படி இல்லாவிட்டால், வருமான வரித்துறையில் உங்கள் வழக்கைக் கவனிக்கும் வருமான வரித்துறை அதிகாரி சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்குவார். 

இந்த விஷயங்களில் கவனம் இருந்தால் இப்படிப்பட்ட சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம்:

வருமான வரி ரிட்டர்ன் டெபாசிட்டுகளுடன் ஒத்துப்போக வேண்டும்: 

நீங்கள் செய்த டெபாசிட்கள் உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியாக இருந்தால், அதை உங்களின் வருமான வரிக் கணக்கில் சேர்க்க மறக்காதீர்கள். மறுபுறம், அந்த வைப்புத்தொகை விலக்கு வருமானத்தின் ஒரு பகுதியாக இருந்தால், விலக்கு வருமானத்தின் தலைப்பில் அதையும் சேர்க்கவும். ஆனால் அந்த டெபாசிட்களை விட்டுவிடாதீர்கள். இந்தச் சிக்கலைத் தவிர்க்க, வங்கி அறிக்கையை கவனமாகப் படிக்கவும். 

ஒரே பரிவர்த்தனையில் 50,000 ரூபாய்க்கு மேல் பணம் டெபாசிட் செய்வதைத் தவிர்க்கவும்: 

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளாலாம். உங்களிடம் ரூ. 1 லட்சம் ரொக்கம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த பணத்தை உங்கள் சேமிப்பு வங்கிக் கணக்கில் (Savings Account) டெபாசிட் செய்ய விரும்பினால், ஒரே பரிவர்த்தனையில் அதை டெபாசிட் செய்வதற்கு பதிலாக, சிறிது சிறிதாக பிரித்து, ஒன்றுக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் டெபாசிட் செய்வது நல்லது. ஒவொரு முறை டெபாசிட் செய்யப்படும் தொகையும் 50,000 ரூபாயை விட குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். 

உங்கள் சேமிப்பு வங்கிக் கணக்கைப் பயன்படுத்த யாரையும் அனுமதிக்காதீர்கள்: 

சில நேரங்களில், நமது உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் தங்கள் பணத்தை நம் வங்கிக் கணக்கில் (Bank Account) டெபாசிட் செய்வார்கள். நோட்டீஸ் வராமல் இருக்க, உங்கள் சேமிப்பு வங்கிக் கணக்கில் வேறு யாருடைய பணத்தையும் டெபாசிட் செய்ய விடாதீர்கள். வருமான வரித் துறை நோட்டீஸ் வந்தால், யார் கணக்கில் பணம் இருக்கிறதோ அவர்தான் வரியை செலுத்த வேண்டும். 

சொத்தின் ஆவணங்களை வைத்திருங்கள்: 

குறிப்பிட்ட நிதியாண்டில் ஏதேனும் சொத்து விற்கப்பட்டிருந்தால், அந்த சொந்தின் விற்பனைப் பத்திரம், மதிப்பீடு போன்ற அனைத்து ஆவணங்களையும் உங்களுடன் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பண வரவுக்கான காரணத்தை வருமான வரித்துறை கெட்கும் போது, நீங்கள் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க முடியும்.

மேலும் படிக்க | Business Idea: இட்லி, தோசை மாவு தொழில் மூலம் இவ்வளவு லாபம் பார்க்கலாமா?

ரொக்கப் பரிமாற்றம் / பரிவர்த்தனைகளுக்கான கணக்கு புத்தகம்: 

நீங்கள் செய்யும் அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் / பரிமாற்றங்களையும் பதிவு செய்ய ஒரு கணக்குப் புத்தகத்தை பராமரிப்பது நல்லது. வருமான வரிக் கணக்கைத் தாக்கல் (Income Tax Return) செய்யும் போது இது பெரிய அளவில் உதவும். 

படிவம்-26AS உடன் சரிபார்க்கவும்: 

படிவம்-26AS ஐ (FORM-26AS) பற்றிய கவனம் எப்போதும் இருப்பது நல்லது. உங்கள் வருமான வரி அறிக்கையில் படிவம்-26AS இல் குறிப்பிடப்பட்டுள்ள TDS விவரங்களுடன் அனைத்து வருமான விவரங்களையும் சேர்க்க மறக்காதீர்கள். நீங்கள் தாக்கல் செய்த வருமான வரிக் (Income Tax) கணக்கின் மொத்த வருமான தலைப்பில் (ஹெட்) படிவம்-26AS இல் உள்ள மொத்தத் தொகைகளும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இ-பேங்கிங் மூலம் அதிக பரிவர்த்தனை செய்வது நல்லது: 

உங்கள் கணக்கு உள்ள வங்கியால் வழங்கப்படும் இணைய வங்கி என அழைக்கப்படும் இ-பேங்கிங் மட்டுமல்ல,  கூகுள் பே, ஃபோன்பே போன்ற பிற பேமெண்ட் வங்கிகளும் ஈ-பேங்கிங் வடிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பேமெண்ட் வங்கிகளில் அதிகப் பரிவர்த்தனை செய்து, நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்வதைத் தவிர்க்கவும்.

மேலும் படிக்க | 750 ரூபாய் கேஷ்பேக் சலுகைகளை வழங்கும்BHIM App! எப்படி க்ளைம் செய்வது? யாருக்கு கிடையாது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News