ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கி கொடுத்த எச்சரிக்கை!

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ரூபாய் நோட்டுகளின் மதிப்பு அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Mar 21, 2023, 07:00 AM IST
  • 2016-ம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
  • புதிய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது.
  • பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூபாய் நோட்டுகளின் மதிப்பு அதிகரித்துள்ளது.
ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கி கொடுத்த எச்சரிக்கை!

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர்-8ம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.  அன்றைய தினம் நள்ளிரவு முதல் ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுக்கள் புழங்க தடை விதிக்கப்பட்டது.  இந்த பணத்திற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளியிடப்பட்டது, பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை வாங்கிக்கொள்ள அரசு மக்களுக்கு வழிவகை செய்தது.  இந்தியாவில் ஏற்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூபாய் நோட்டுகள் தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றது.   

மேலும் படிக்க | வீடு வாங்க கடன் வாங்க போறீங்களா... பெண்களுக்கு குறைந்த வட்டி கொடுக்கும் வங்கிகள்!

தற்போது ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக நிதி அமைச்சகத்திலிருந்து மிகப்பெரிய தகவல் வெளியாகியுள்ளது.  பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  இதுதவிர ரூ.500 மற்றும் ரூ.2000 ரூபாய் நோட்டுக்கள் குறித்தும் அரசாங்கம் முக்கியமான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ரூபாய் நோட்டுகளின் மதிப்பு அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் பதிலளித்துள்ளது.  

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டில் பணப்புழக்கம் ரூ.13,35, 200 கோடியாக இருந்தது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 8.7 சதவீதமாகும்.  மார்ச் 2018 ஆம் ஆண்டில் பணப்புழக்கம் ரூ.18 லட்சத்து 21 ஆயிரத்து 318 கோடியாக இருந்தது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 10.7 சதவீதமாகும்.  மார்ச் 2019 ஆம் ஆண்டில் பணப்புழக்கம் 21 லட்சத்து 36 ஆயிரத்து 746 கோடி ரூபாயாக இருந்தது.  தற்போது பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளும் வசதி வெளிநாட்டினருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருவது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | வீட்டு கடன் வாங்கப்போறீங்களா? அப்போ...உங்களுக்குதான் இந்த பதிவு!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News