IRCTC அசத்தல் டூர் பேக்கேஜ் அறிமுகம்.. புத்தாண்டு 2024 இல் செம ஜாலி தான்

IRCTC Tour Package : புத்தாண்டு 2024 அன்று நீங்கள் சுற்றிப்பார்க்க திட்டமிடுகிறீர்கள் என்றால், ஐஆர்சிடிசி உங்களுக்காக ஒரு டூர் பேக்கேஜை மிக மலிவு விலையில் கொண்டு வந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 12, 2023, 03:47 PM IST
  • அற்புதமான டூர் பேக்கேஜ் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
  • மத வழிபாட்டுத் தலங்களுக்கு மலிவான விலையில் சென்று வர வாய்ப்பு கிடைக்கும்.
  • ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விவரம்.
IRCTC அசத்தல் டூர் பேக்கேஜ் அறிமுகம்.. புத்தாண்டு 2024 இல் செம ஜாலி தான் title=

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விவரம்: சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, இந்திய ரயில்வேயின் நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (Indian Railway Catering and Tourism Corporation), நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணங்களுக்கான டூர் பேக்கேஜ்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த பேக்கேஜ்களின் கீழ், சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு மலிவான விலையில் சென்று வர வாய்ப்பு கிடைக்கும்.

இத்தகைய சூழ்நிலையில், புத்தாண்டு 2024 அன்று உங்களுக்காக IRCTC மிகவும் சிக்கனமான மற்றும் அற்புதமான டூர் பேக்கேஜ் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு நீங்கள் மத வழிபாட்டு இடங்களுக்குச் செல்ல விரும்பினால், உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. டிஏவு ஹைக் உடன் இதுவும் கிடைக்கும்

உண்மையில், புத்தாண்டு 2024 இன் போது உங்களுக்காக அயோத்தி, காசி, பிரயாக்ராஜ், புத்தகயை மற்றும் சாரநாத் ஆகியவற்றின் பேக்கேஜை IRCTC வலைத்தளம் கொண்டு வந்துள்ளது. ஐஆர்சிடிசி தனது டூர் பேக்கேஜ் குறித்த தகவலை சமூக ஊடகத்தளமான தனது ட்வீட் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், இந்த பேக்கேஜ் 31 டிசம்பர் 2023 அன்று தொடங்கும், அதேபோல் மீண்டும் 21 ஜனவரி 2024 அன்று தொடங்கும் என்று பதிவிட்டுள்ளது.

இந்த பேக்கேஜின் கீழ், வாரணாசி, பிரயாக்ராஜ், லக்னோ, அயோத்தி, புத்தகயை மற்றும் சாரநாத் ஆகிய மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.



பேக்கேஜ் விவரங்கள்
பேக்கேஜின் பெயர் HOLY AYODHYA WITH KASHI & PRAYAGRAJ
பயண முறை விமானம்
ஸ்டேஷன் மும்பை விமான நிலையம்
வகுப்பு கம்ஃபர்ட்
சுற்றுப்பயண தேதிகள் 30.12.2023 முதல் 05.01.2023 வரை
  21.01.2024 முதல் 27.01.2024 வரை
தங்குமிடம் டீலக்ஸ் ஹோட்டல் தங்குமிடம்

ஐஆர்சிடிசியின் கூற்றுப்படி, 6 இரவுகள் மற்றும் 7 பகல்களுக்கான டூர் பேக்கேஜ் மும்பையிலிருந்து தொடங்கும். இதன் கீழ், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கை முன்பதிவு செய்யப்படும். ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctctourism.comஐப் பார்வையிடுவதன் மூலம் இந்த டூர் பேக்கேஜுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இதனுடன், https://www.irctctourism.com/pacakage_description?packageCode=WMA64 என்ற இணைப்பில் இந்த டூர் பேக்கேஜுக்கான நேரடி இருக்கைகளை முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.

ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், 827931660 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம். இதனுடன், டூர் பேக்கேஜ்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctctourism.com இலிருந்தும் தகவல்களைப் பெறலாம்.

கட்டண விவரம்:
இந்த பயணத்தை நீங்கள் தனியாக செய்ய விரும்பினால், நீங்கள் ரூ.68,100 செலுத்த வேண்டும், நீங்கள் இரண்டு பேருடன் பயணம் செய்ய விரும்பினால், ஒரு நபருக்கு ரூ.40,200 செலுத்த வேண்டும். அதேசமயம், மூன்று பேருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.34,700 செலுத்த வேண்டும். அதேசமயம் குழந்தைகளுக்கு ரூ.27,400 கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | Business: ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்தில் உச்சத்தைத் தொடும் கேகேஆர் முதலீடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News