புதுடெல்லி: இதுவரை இல்லாத உச்சமாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 40,816 புள்ளிகளைத் தொட்டது. இது அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்தியாவின் சென்செக்ஸ் உச்சத்தால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் பாரதி ஏர்டெல் லிமிடெட் ஆகியவற்றின் லாபம் புதிய சாதனையை எட்டியது. வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகரித்தது.
காலை 10.05 மணிக்கு, சென்செக்ஸ் 0.6% உயர்ந்து 40754.49 புள்ளிகளாகவும், நிஃப்டி 0.6% உயர்ந்து 12014.50 புள்ளிகளாகவும் இருந்தது.
தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் (Reliance Jio Infocomm) அடுத்த சில வாரங்களில் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று கூறியதையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Ltd -RIL) நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்ந்து புதிய சாதனையை எட்டியுள்ளது. கடந்த இரண்டு அமர்வுகளில் இந்த பங்கு கிட்டத்தட்ட 7% அதிகரித்துள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவத்தின் பங்குகளும் 2.5% உயர்ந்தது. கடந்த நான்கு அமர்வுகளில் ஸ்கிரிப் (Scrip) பங்குகள் 23% முன்னேறியுள்ளது. மொபைல் அழைப்பு மற்றும் தரவு கட்டணங்களை டிசம்பர் 1 முதல் உயர்த்துவோம் என இந்த இரண்டு நிறுவனங்களும் அறிவித்ததை அடுத்து பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளது. அதன் போட்டி நிறுவனமான வோடபோன் ஐடியாவின் பங்குகள் 10% உயர்ந்தது.
ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யூகோ வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் கடந்த மூன்று அமர்வுகளில், யூகோ வங்கி 43%, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் 24%, கார்ப்பரேஷன் வங்கி 80% உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், ஹாங்காங்கில் போராடி வருபவர்களுக்கு ஆதரவாகவும், போராட்டத்தை வன்முறை மூலம் அடக்க நினைக்கும் சீனாவுக்கு எதிராகும் ஒரு மசோதாவை அமெரிக்க செனட் நேற்று (செவ்வாயன்று) ஒருமனதாக நிறைவேற்றியது. இதனையடுத்து ஆசிய பங்கு சந்தைகள் பலவீனமாக உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.