கொரோனா தொற்றினால் ஏற்பட்ட தாக்கம், உக்ரைன் - ரஷ்யா போர் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. பங்குச்சந்தைகளிலும் தொடர் சரிவு நிலவுகிறது. இவையெல்லாம் பொருளாதார மந்தநிலையை உலகம் எதிர்நோக்கவுள்ளதற்கான அறிகுறி என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆட்குறைப்பு, புதிய ஆட்களை பணியமர்த்துவதை நிறுத்துவது, ஊழியர்களின் பல்வேறு சலுகைகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது பொருளாதார மந்தநிலையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதை குறைத்துள்ளது. தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், 2-வது காலாண்டில் 10,000 பணியாளர்கள் சேர்க்கப்பட்டாலும், எஞ்சியுள்ள ஆண்டில் இந்த எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும், தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மார்ச் மாத இறுதி வரை கூகுளில், சுமார் 1,64,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
மேலும் படிக்க | இலங்கையின் புதிய அதிபர் யார்? மும்முனைப் போட்டி
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில், அதிக ஊழியர்கள் பணிக்குத் திரும்பியுள்ளதாகவும், இது குறைக்கப்பட வேண்டும் எனவும் அமேசான் நிறுவனம் கூறியுள்ளது. உலகிலேயே அமேசான் நிறுவனம் தான் அதிக பணியாளர்களைக் கொண்டதாகும். அந்நிறுவனத்தில் சுமார் 16 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். செலவைக் குறைக்க அமேசான் நிறுவனம் தனது கிடங்குளை குத்தகைக்கு விடுவதோடு, ஊழியர்களுக்கான சலுகைகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், சில பிரிவுகளுக்கு புதிதாக ஆட்கள் எடுப்பதையும், செலவழிப்பதையும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதார சரிவை ஆப்பிள் நிறுவனத்தால் சமாளிக்க முடியுமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத் தகவலின்படி, ஆப்பிள் நிறுவனத்தில் 1,54,000 ஊழியர்கள் உள்ளனர்.
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் இன்க்., புதிய பணியாளர்களை எடுப்பதை 30% குறைத்துள்ளது. இதுகுறித்து ஊழியர்களிடம் பேசிய தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க், சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியைத் தான் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
சேல்ஸ்ஃபோர்ஸ் கிளவுட் கம்ப்யூட்டிங் தளம் புதிதாக ஆட்களை பணியமர்த்துவதை குறைத்துள்ளதோடு, ஊழியர்களின் பயணச் செலவுகளையும் குறைத்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் ஆபிஸ் மற்றும் டீம்ஸ் பிரிவில் புதிய ஆட்கள் பணியமர்த்தப்படுவதை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. 2021-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 1,81,000 பணியாளர்கள் இருந்தனர்.
போகேமான் வீடியோ கேம் தயாரிப்பாளரான நியாண்டிக் நிறுவனம், கடந்த மாதத்தில் 8% பணியாளர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இது பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வதற்கான முயற்சி என தலைமை செயல் அதிகாரி ஜான் ஹான்கே ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் தெரிவித்தார்.
ரியல் எஸ்டேட் தரகு தளமான காம்பஸ், கடந்த மாதம் தாக்கல் செய்த தகவலின்படி, 450 பேரை( சுமார் 10% ) ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. 2021-ம் ஆண்டின் இறுதியில் இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றினர். மற்றொரு ரியல் எஸ்டேட் தரகு நிறுவனமான ரெடிஃபின், ஜூன் மாதத்தில் 8% ஊழியர்களைக் குறைத்தது. கடந்த ஆண்டு இறுதியில் இந்நிறுவனத்தில் சுமார் 6,500 பணியாளர்கள் இருந்தனர்.
மேலும் படிக்க | டிவிட்டர் வாங்குவது தொடர்பான வழக்கில் எலான் மஸ்கின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ