இலங்கையின் புதிய அதிபர் யார்? மும்முனைப் போட்டி

Sri Lankan Presidential Election: இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு தொடங்கியது; தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுர குமார திசநாயகே ஆகிய மூவர் போட்டியிடுகின்றனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 20, 2022, 10:48 AM IST
  • இலங்கை அதிபர் தேர்தல் இன்று
  • மும்முனை போட்டி காணும் அதிபர் தேர்தல்
  • அடுத்த அதிபராவது பொருளாதாரத்தை சீர் செய்வாரா?
இலங்கையின் புதிய அதிபர் யார்? மும்முனைப் போட்டி title=

கொழும்பு: பரபரப்பான சூழலில் இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு தொடங்கியது; தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுர குமார திசநாயகே ஆகிய மூவர் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் நிலையில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியில் இருக்கிரார். 73 வயதான ரணில் விக்கிரமசிங்க, 63 வயதான தீவிர சிங்கள பௌத்த தேசியவாதியும், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா (SLPP) கட்சி மற்றும் இடதுசாரி ஜனதா விமுக்தியில் இருந்து பிரிந்த குழுவின் முக்கிய உறுப்பினருமான டலஸ் அழகப்பெருமவும் அதிபர் தேர்தல் வேட்பாளர்களாக உள்ளனர்.பெரமுன (ஜே.வி.பி) அனுரகுமார திஸாநாயக்கவும் அதிபர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்.   

இன்று (2022 ஜூலை 20) நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலுக்கான மூன்று வேட்பாளர்களாக ஸ்ரீலங்காவின் தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மேலும் இருவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்தனர். தீவிர சிங்கள பௌத்த தேசியவாதியும் ஆளும் SLPP யில் இருந்து பிரிந்த குழுவின் முக்கிய உறுப்பினருமான டலஸ் அழகப்பெருமவை, விக்கிரமசிங்க எதிர்கொள்ளவுள்ளார். 

மேலும் படிக்க | இலங்கையில் மீண்டும் அவரச நிலை: பிரகடனம் செய்தார் தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இலங்கையில் பல்வேறு மாற்றங்கள் அதிரடியாக நடைபெற்று வருகின்றன. அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக, ஜூலை 20 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், அடுத்த அதிபர் யார் என்பது தெரியவரும்.

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயவின் தலைவரான 55 வயதான சஜித் பிரேமதாச, அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதற்காக ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கும் புதிய அதிபர் நவம்பர் 2024 வரை முன்னாள் அதிபர் பதவிக்காலத்தில் பணியாற்றுவார். ஜனாதிபதித் தேர்தலில் அழகப்பெருமவை வெற்றியடையச் செய்வதற்கு தமது கட்சியும் எதிர்க்கட்சியின் பங்காளிக் கட்சிகளும் இணைந்து செயற்படும் என பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க |  இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை 

1978 முதல், இலங்கையின் வரலாற்றில், அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு நாடாளுமன்றம் வாக்களித்ததில்லை. 1982, 1988, 1994, 1999, 2005, 2010, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் மக்களினால் அதிபர்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1993 ஆம் ஆண்டு அதிபர் ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட போது மட்டுமே, அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது. அப்போது, பிரேமதாசவின் பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்காக டி.பி.விஜேதுங்க நாடாளுமன்றத்தால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டார்.

இலங்கையில் தற்போது தேர்ந்தெடுக்கப்படும் புதிய அதிபர், 2024 நவம்பர் மாதம் வரை ராஜபக்சேவின் எஞ்சிய பதவிக்காலத்தில் பணியாற்றுவார். 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஆளும் SLPP கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது, இது கிட்டத்தட்ட 100 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இன்றைய தேர்தல் நாட்டின் சிக்கல்களை சீர் செய்வதற்கான முக்கியமான படியாக இருக்கும்.

மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News