வங்கி கணக்கில் Zero Balance இருந்தாலும், பணம் எடுப்பது எப்படி ..!!!!

மாதத்தின் கடைசி நாளில் பணம் இல்லாமல் போனால், அல்லது திடீரென பணம் தேவைப்படும் நேரத்தில் வங்கிகளின் ஓவர் டிராஃப்ட்  (Overdraft) வசதி சிறந்த வகையில் கை கொடுக்கும். 

Written by - ZEE Bureau | Last Updated : Nov 19, 2020, 02:40 PM IST
  • வங்கிக் கணக்கில் ஜீரோ பேலன்ஸ், அதாவது பணம் இல்லை என்றாலும், கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம்.
  • அவசர நேரத்தில் பணத்தின் தேவை ஏற்படும் போது, வேறு எங்காவது கடன் வாங்குவதை போலவே வங்கியில், இதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கி கணக்கில் Zero Balance இருந்தாலும், பணம் எடுப்பது எப்படி ..!!!!

வங்கிக் கணக்கில் ஜீரோ பேலன்ஸ், அதாவது பணம் இல்லை என்றாலும், கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம்.   

அவசர நேரத்தில் பணத்தின் தேவை ஏற்படும் போது, வேறு எங்காவது கடன் வாங்குவதை போலவே வங்கியில், இதற்காக விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஓவர் ட்ராஃப் வசதி சம்பளம் மற்றும் நடப்புக் கணக்கு உள்ளவர்களுக்கு கொஞ்சம் எளிதாக கிடைக்கும்.

மாதத்தின் கடைசி நாளில் பணம் இல்லாமல் போனால், அல்லது திடீரென பணம் தேவைப்படும் நேரத்தில் வங்கிகளின் ஓவர் டிராஃப்ட்  (Overdraft) வசதி சிறந்த வகையில் கை கொடுக்கும். இது வங்கிகளால் (Bank) வழங்கப்படும் ஒரு வசதி, இதைப் பற்றி மக்களுக்கு அதிகம் தெரிவதில்லை. அதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஓவர் டிராஃப்ட் வசதி என்றால் என்ன

ஓவர் டிராஃப்ட் வசதி குறுகிய கால கடனைப் (Short term loan) போன்றது. இதன் மூலம் கணக்கு வைத்திருப்பவர் தனது கணக்கில் பணம் இல்லாதபோது அல்லது முற்றிலும் பூஜ்ஜியம் என்ற அளவில் இருப்பு இருக்கும்போது கூட தனது கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். ஏறக்குறைய அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் ஓவர் டிராஃப்ட் வசதி உள்ளது. பெரும்பாலான வங்கிகளில், இந்த வசதி நடப்புக் கணக்கு ( Current account), சம்பளக் கணக்கு  (Salary account) அல்லது நிலையான வைப்புத்தொகையில் (FD) கிடைக்கிறது. சில வங்கிகளில், பங்குகள், பத்திரங்கள், காப்பீடு, வீடு, சொத்து போன்றவற்றின் அடிப்படையிலும் ஓவர்டிராப்ட் வசதி கிடைக்கிறது.

ALSO READ | தீராத பிரச்சனையா... வீட்டின் படிக்கட்டு காரணமாக இருக்கலாம்... !!!

அவசர நேரத்தில் பணத்தின் தேவை ஏற்படும் போது, வேறு எங்காவது காடன் வாங்குவதை போலவே வங்கியில், இதற்காக விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஓவர் ட்ராஃப் வசதி சம்பளம் மற்றும் நடப்புக் கணக்கு உள்ளவர்களுக்கு கொஞ்சம் எளிதாக கிடைக்கும்.

ஓவர் டிராப்டின் கீழ், தேவைப்படும் நேரத்தில் நீங்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்கலாம். இது ஒரு கடன் என்பதால், நீங்கள் அதை பின்னர் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் அதற்கு வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

ஓவர் டிராஃப்ட் எவ்வளவு கிடைக்கும்?

ஓவர் டிராஃப்ட் மீது எவ்வளவு வட்டி வசூலிக்கப்படும், எவ்வளவு வழங்கப்படும் என்பது, நீங்கள் கொல்லாடரல் அல்லது அடமானமாக வைத்திருக்கும் பொருளை பொறுத்தது. ஓவர் டிராப்டுக்கு, நீங்கள் வங்கியிடம் ஏதாவது அடகு வைக்க வேண்டும். நிலையான வைப்பு (FD), பத்திரங்கள் அல்லது பங்குகள் போன்றவை. இதற்கு ஏற்ற வகையில் உங்கள் ஓவர் ட்ராஃப்ட் வரம்பு இருக்கும். உதாரணமாக, உங்களிடம் வங்கியில் ரூ .2 லட்சம் எஃப்.டி இருந்தால், ரூ .1.50 லட்சம் வரை ஓவர் டிராஃப்ட் பெறலாம். பங்குகள், பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்கள் விஷயத்தில், இந்த தொகை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.

ALSO READ | தீராத பண பிரச்சனையா...கவலை வேண்டாம்.. இந்த நான்கு விஷயங்களை கடைபிடித்தால் போதும் ..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News