சுகாதார காப்பீடு... உங்கள் கிளைம் நிராகரிக்கப்படுவதற்கான ‘சில’ முக்கிய காரணங்கள்!

சிகிச்சைக்கான செலவுகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மக்கள் மருத்துவக் காப்பீட்டை வாங்குகிறார்கள். ஆனால், சில சமயங்களில், ​​காப்பீட்டு நிறூவனங்கள் பாலிசி கோரிக்கையை நிராகரிக்கிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 26, 2023, 11:57 AM IST
  • காத்திருப்பு காலம் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்
  • பாலிசியில் உள்ள நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி காப்பீட்டு நிறுவனம் கிளைம் கோரிக்கையை நிராகரிக்கிறது.
  • எந்தவொரு தவறான விவரமும் உங்கள் சுகாதார காப்பீட்டுக் கிளைமை நிராகரிக்க காரணமாகலாம்
சுகாதார காப்பீடு... உங்கள் கிளைம் நிராகரிக்கப்படுவதற்கான ‘சில’ முக்கிய காரணங்கள்! title=

சமீப ஆண்டுகளில், சாதாரண சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு சென்றாலே, சில ஆயிரங்களை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், நடுத்தர குடும்பங்கள், மருத்துவ அவசரநிலைகளுக்கு எதிராக தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாத்துக்கொள்ள சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவதன் முக்கியத்துவத்தை அதிகமான மக்கள் உணர்ந்துள்ளனர். இருப்பினும், உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி அனைவரும் நன்கு அறிந்திருக்க வேண்டும், ஏனெனில் சரியான தகவல்களை அறிந்து கொள்ளாதது உங்கள் காப்பீட்டு கிளைம்களை நிராகரிக்க வழிவகுக்கும். உங்கள் சுகாதார காப்பீடு கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சிகிச்சைக்கான செலவுகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மக்கள் மருத்துவக் காப்பீட்டை வாங்குகிறார்கள். ஆனால், சில சமயங்களில், ​​காப்பீட்டு நிறூவனங்கள் பாலிசி கோரிக்கையை நிராகரிக்கிறது. இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். பாலிசியில் உள்ள நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி காப்பீட்டு நிறுவனம் கிளைம் கோரிக்கையை நிராகரிக்கிறது.  ஒரு ஹெல்த் பாலிசியை வாங்கினால் மட்டும் போதாது, ஆனால் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சரியாகப் புரிந்துகொள்வது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்கள் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக நீங்கள் இதுவரை கவனம் செலுத்தவில்லை என்றால்,  அதன் முக்கிய விஷயங்களை ஒருமுறை புரிந்துகொள்வது நல்லது.

காத்திருப்பு காலம் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்

முதலில் காத்திருப்பு காலம் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். பாலிசியை வாங்கிய பிறகு, அதன் பலன்களைப் பெற வாடிக்கையாளர் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். இது காத்திருப்பு காலம் எனப்படும். பாலிசியை வாங்கிய நாளிலிருந்து காத்திருப்பு காலம் தொடங்குகிறது. காத்திருப்பு காலத்தில் வாடிக்கையாளர் எந்த கிளைமையும் செய்ய முடியாது. அதாவது நீங்கள் பாலிசியை வாங்கி, காத்திருப்பு காலத்தில் சிகிச்சை தேவைப்பட்டால், பாலிசியின் பலன் கிடைக்காது.

தவறான தகவல்

உடல்நலக் காப்பீட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது, ​​விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் (ஏதேனும் இருந்தால்) உள்ளிட்ட அனைத்து துல்லியமான தகவல்களுடன் படிவத்தை நிரப்புவதை உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு தவறான விவரமும் உங்கள் சுகாதார காப்பீட்டுக் கிளைமை நிராகரிக்க காரணமாகலாம்.

மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் முன் இந்த விதிகளை நியாபகம் வச்சுக்கோங்க!

மருத்துவ வரலாற்றை மறைத்தல்

விண்ணப்பதாரர்கள் தங்கள் மருத்துவ வரலாறு பற்றிய அனைத்து முக்கிய விவரங்களையும் வெளியிட வேண்டும். பெரும்பாலும் இதுபோன்ற விவரங்களை வெளிப்படுத்துவதைத் தவிர்க்கும்போது, ​​சிக்கல்கள் ஏற்படுகின்றன. நமக்கு இருக்கும் உடல நல பிரச்சனைகள், முன்னதாக எடுத்துக் கொண்ட சிகிச்சைகள் போன்ற விபரங்கள் அனைத்தையும் சரியாக தெரிவிப்பது முக்கியம், ஏனெனில் விவரங்கள் விடுபட்டு, பின்னர் தெரியவரும் போது காப்பீட்டாளர் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம். பாலிசியை வாங்கும் போது உள்ள நோய்களைப் பற்றிய தகவல்களை வழங்காததால் 25 சதவீத நிராகரிப்புகள் ஏற்படுவதாகக் காட்டுகிறது. காப்பீட்டு நிறுவனம் கோரும் தகவல்கள் சரியான நேரத்தில் வழங்கப்படாததால் சுமார் 16 சதவீதம் பேர் நிராகரிக்கப்படுகிறார்கள். எனவே, காப்பீட்டு நிறுவனங்கள் இது குறித்து பாலிசிதாரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காப்பீட்டு நிறுவனம் க்ளெய்மை நிராகரித்தது தவறு என்று பாலிசிதாரர் கருதினால், அதற்கு எதிராக புகார் செய்யலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

காப்பீட்டை புதுப்பிக்காதது 

சீரான இடைவெளியில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்காதது பாலிசி காலாவதியாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில், இந்த இடைவெளியில் காப்பீடு செய்தவருக்கு திடீர் கவரேஜ் தேவைப்பட்டால், கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்படும்.

காப்பீட்டு வரம்பை அடைந்தால் பாலிசி நிராகரிக்கப்படும்

4.5 சதவீத உரிமைகோரல்கள் தவறான தாக்கல் காரணமாக நிராகரிக்கப்படுகின்றன. காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிகளை விற்பனை செய்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல் வாடிக்கையாளர்களுக்கு க்ளைம்களை தாக்கல் செய்வதற்கான சரியான வழியையும் சொல்ல வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சில பாலிஸிகள் அவற்றின் வரம்பை எட்டியதால் நிராகரிக்கப்படுகின்றன. இதன் பொருள் பாலிசியின் முழுத் தொகையும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் அதிக தொகை அல்லது காப்பீட்டில் பாலிசியை வாங்க வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிராக புகார் செய்யும் முறை

வாடிக்கையாளர் முதலில் காப்பீட்டு நிறுவனத்தின் குறை தீர்க்கும் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அவர் கேட்கலாம். இது குறித்த முழுமையான தகவல்களை அவருக்கு அளித்து அவரை திருப்திப்படுத்துவது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொறுப்பு. இது இருந்தபோதிலும், பாலிசிதாரர் திருப்தி அடையவில்லை என்றால், அவர் IRDAI-க்கு புகார் செய்யலாம். அவர் IRDAI குறைதீர்ப்பு அழைப்பு மையத்தில் புகார் செய்யலாம். இதற்குப் பிறகு, இன்சூரன்ஸ் ஒம்புட்ஸ்மேனை அணுகவும் வழி உள்ளது.

மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு அடிச்சது லாட்டரி.. 5% டிஏ ஹைக், டபுள் சம்பளம் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News