பொதுவாகவே, சிறு நிதி வங்கிகள் FDக்கு அதிக வட்டி விகிதங்களை (Small Finance Bank FD Interest Rate)வழங்குகின்றன. ஆனால் சில பெரிய வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு FD மீது சிறந்த வட்டியை வழங்குகின்றன (senior citizen FD rates) இந்த வங்கிகள் 3 வருட மூத்த குடிமக்கள் எஃப்டிக்கு 8.1 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த வட்டி விகிதம் ரூ.2 கோடிக்கு குறைவான FDகளுக்கு செல்லுபடியாகும். இன்றும் கூட மூத்த குடிமக்கள் மத்தியில் FD முதலீடு என்பது மிகவும் விரும்பப்படும் முதலீட்டு விருப்பமாக உள்ளது. நிலையான வைப்புத் தொகைகளுக்கு பம்பர் வட்டி வழங்கும் இந்த தனியார் வங்கிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
DCB வங்கி மூத்த குடிமக்கள் FD விகிதம்
DCB வங்கி 26 மாதங்கள் மற்றும் 37 மாதங்களுக்கும் குறைவான FDகளில் மூத்த குடிமக்களுக்கு 8.1 சதவீத வட்டி விகிதத்தை (DCB Bank senior citizen FD rates) வழங்குகிறது.
RBL வங்கி மூத்த குடிமக்கள் FD விகிதம்
RBL வங்கி 24 மாதங்கள் முதல் 36 மாதங்களுக்கு இடைப்பட்ட FDகளில் மூத்த குடிமக்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்தை (RBL Bank senior citizen FD rates) வழங்குகிறது.
மேலும் படிக்க | Budget: 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருப்பவர்களுக்கு பட்ஜெட்டில் ஸ்வீட் நியூஸ்?
IndusInd வங்கி மூத்த குடிமக்கள் FD விகிதம்
IndusInd வங்கி 2 ஆண்டுகள் 9 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் 3 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் FDகளில் மூத்த குடிமக்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்தை (IndusInd Bank senior citizen FD rates) வழங்குகிறது.
IDFC வங்கி மூத்த குடிமக்கள் FD விகிதம்
IDFC வங்கி 2 ஆண்டுகள், 1 நாள் மற்றும் 3 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட FDகளில் மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தை (IDFC Bank senior citizen FD rates) வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்கள் FD விகிதம்
ஐசிஐசிஐ வங்கி 2 ஆண்டுகள், 1 நாள் மற்றும் 3 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட FDகளில் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தை (ICICI Bank senior citizen FD rates) வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கான அஞ்சலக திட்டம்
வங்கிகளை தவிர அரசின் சில திட்டங்களும் மூத்த குடிமக்களுக்கு நலல வருமானத்தை வருகின்றன. அஞ்சலகத்தின் சிறுசேமிப்புத் திட்டங்களின் கீழ் பல சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. இதில் முதலீட்டாளர்களுக்கு பல வகையான நன்மைகள் வழங்கப்படுகின்றன. மூத்த குடிமக்களுக்காக அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படும் சிறப்பான ஒரு திட்டம் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Saving Scheme). இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் 8.2 சதவீதம் வட்டி தருகிறது. அரசின் திட்டம் என்பதால், பண இழப்பு ஏற்படும் அபாயம் இல்லை.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் அல்லது SCSS என்பது மூத்த குடிமக்களுக்காக அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படும் திட்டமாகும். இந்த திட்டத்தில் 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது மற்றும் இது தபால் அலுவலகத்தின் அதிக வட்டி செலுத்தும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு மொத்த தொகையை டெபாசிட் (Investment Tips) செய்ய வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் வட்டி விகிதத்தின் பலனைப் பெறத் தொடங்குவீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ