Petrol Price: பெட்ரோல் டீசல் விலையில் மிகப்பெரிய சரிவு, விரைவில் நல்ல செய்தி?

Crude Oil Price Latest News: நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், சற்று ஆறுதல் தரும் செய்தி ஒன்று தற்போது வந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவிலான வீழ்ச்சி இருக்கும் என சிட்டி குழுமம் கணித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 6, 2022, 06:34 PM IST
  • வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் நியூஸ்.
  • விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்.
  • சிட்டி குழுமம் விரிவான அறிக்கையை அளித்துள்ளது.
Petrol Price: பெட்ரோல் டீசல் விலையில் மிகப்பெரிய சரிவு, விரைவில் நல்ல செய்தி? title=

சாமானியர்களுக்கு நல்ல செய்தி!! நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், சற்று ஆறுதல் தரும் செய்தி ஒன்று தற்போது வந்துள்ளது. உலக அளவில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், வரும் காலத்தில் இதில் இந்தியாவுக்கு நல்ல செய்தியே காத்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவிலான வீழ்ச்சி இருக்கும் என சிட்டி குழுமம் கணித்துள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை குறையும்!

2022 இறுதிக்குள் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 65 டாலராக குறையும் என்று சிட்டி குரூப் தெரிவித்துள்ளது. இப்படி நடந்தால், 2023 இறுதிக்குள், எரிபொருளின் விலை பீப்பாய்க்கு 45 டாலராக குறையும். தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 105 டாலராக உள்ளது. இதில் 58 சதவீதம் வீழ்ச்சி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சிட்டி குரூப் அளித்துள்ள தகவலில், 'உலகப் பொருளாதார மந்தநிலையால், கச்சா எண்ணெய் தேவை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை வரலாற்றை பார்வையிட்டால், உலகப் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம், ​​​​கச்சா எண்ணெய் விலையில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | LPG Price Update: எல்பிஜி சிலிண்டரின் இன்றைய விலை நிலவரம்

கச்சா எண்ணெய் விலை குறையும்

2008 ஆம் ஆண்டில் மந்தநிலை ஏற்பட்டபோது, ​​கச்சா எண்ணெய் பேரலுக்கு 149 டாலரிலிருந்து 35 டாலராக சரிந்தது. இதற்குப் பிறகு, கோவிட் -19 தொற்றுநோய்களின் போதும், உலகளாவிய லாக்டவுன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 20 டாலராக குறைந்தது. முன்னதாக செவ்வாயன்று, பொருளாதார நெருக்கடி மற்றும் மந்தநிலை காரணமாக, அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $ 100 என்ற அளவுக்கும் கீழ் சென்றது. அதாவது மந்தநிலை ஏற்படும் போதெல்லாம், உலக அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைவதால் விலையிலும் சரிவு ஏற்படுகிறது.

இந்தியாவுக்கு பெரிய நன்மை கிடைக்கும்!

கச்சா எண்ணெய் விலை குறைவது, இந்தியாவுக்கு மிகச்சிறந்த செய்தியாக இருக்கும். இந்தியா தனது தேவைக்கான 80 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அந்நிய செலாவணி இருப்புகளிலிருந்து அதிகபட்ச செலவு கச்சா எண்ணெய்க்காக செய்யப்படுகிறது. 

ஆகையால், வரும் காலங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால், இந்தியாவில் சாமானியர்களுக்கு பெட்ரோல், டீசல் குறைந்த விலையில் கிடைப்பதுடன், அன்னியச் செலாவணி கையிருப்பும் மிச்சப்படும். இதன் மூலம் அரசின் நிதிப் பற்றாக்குறையும் குறையும்.

மேலும் படிக்க | PM Kisan: பிரதமர் கிசான் நிதியின் 12வது தவணை பெற இதைச் செய்யுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News