நீங்கள் ஒரு வீடு, ஃப்ளாட் அல்லது வணிகத்திற்கான சொத்தை வாங்க நினைத்துக் கொண்டிருந்தாலோ, அல்லது அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலோ, இந்த மாதம் உங்களுக்கு அதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு வரவுள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) செப்டம்பர் மாதத்தில் இதுபோன்ற சொத்துக்களை மின் ஏலம் விடப் போகிறது. இதில், நீங்கள் விரும்பினால், வெவ்வேறு பட்ஜெட்டில் உள்ள சொத்துக்களை ஏலத்தில் வாங்க முயற்சி செய்யலாம். பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), நாடு முழுவதும் ஒரு மெகா இ-ஏலத்தை (E-Auction) நடத்த உள்ளது.
இந்த சொத்து ஏலம் எப்போது நடக்கும்?
ஒருவர் சொத்தின் மீதுள்ள கடனை செலுத்தத் தவறினால், வங்கி சொத்தை கையகப்படுத்தி அதை ஏலம் விட்டு நிலுவையில் உள்ள பணத்தை வசூலிக்கிறது. PNB இது போன்ற வீடுகள் அல்லது சொத்துக்களை செப்டம்பர் 15 2020 முதல் செப்டம்பர் 29 2020 வரை ஏலம் விடப் போகிறது.
இதில் விண்ணப்பிக்க பதிவு செய்ய வேண்டும்
இந்த ஏலத்தில் சொத்து வாங்க முயற்சி செய்ய, ஆன்லைன் e-Bkray போர்ட்டல், https://ibapi.in க்குச் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த இணையதளத்தில், வங்கிகளால் கையக்கப்படுத்தப்பட்ட சொத்துக்களின் மின் விற்பனை செய்யப்படுகிறது. இங்கே நீங்கள் ஏலத்துடன் தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், ஏலத்தின் அளவு, சொத்துக்களின் மதிப்பு மற்றும் அவற்றின் இடம் ஆகியவற்றைக் காணலாம். இவற்றின் விவரங்களை புரிந்து கொள்ளலாம். இந்த மின் ஏலம் நாடு முழுவதும் முற்றிலும் வெளிப்படையான முறையில் செய்யப்படும் என்று PNB கூறியுள்ளது.
PNB is holding nationwide Online Mega e-Auction of residential/commercial properties on 15.09.2020 and 29.09.2020 in a transparent manner. Please visit e-Bkray portal (https://t.co/N1l10s1hyq] to register and access terms & conditions, bid size, value and location of properties. pic.twitter.com/DCB7oQdYqQ
— Punjab National Bank (@pnbindia) September 10, 2020
ALSO READ: இந்த மாதத்துடன் முடிவடையும் கடன் தவணை சலுகையை ரிசர்வ் வங்கி நீட்டிக்குமா?
மின் ஏலத்திற்கு, ibapi.in போர்டல் முகப்பு பக்கத்தில் உள்ள பதிவு இணைப்பைக் கிளிக் செய்து மின்னஞ்சல் ஐடி மற்றும் பிற தகவல்களைக் கொடுத்து உங்களை பதிவு செய்து கொள்ளலாம். ரியல் எஸ்டேட் டெவெலப்பர்கள் மற்றும் பில்டர்களின் கூட்டமைப்பான கிரெடாய் நேஷனலின் தலைவர் ஜாக்சே ஷா கூறுகையில், வங்கிகளின் மின் ஏலத்தில் சொத்து வாங்குவது லாபகரமான ஒப்பந்தமாகும் என்றார். இந்த சொத்துகளில் எந்த ஆபத்தும் இருக்காது என்று அவர் அவர் கூறுகிறார். இதில் நீங்கள் மலிவாகவும் வீட்டைப் பெறலாம். வங்கியில் இருந்து வீட்டுக் கடன் பெறுவதும் எளிதாகும்.
இருப்பினும், வாடிக்கையாளர் தான் வாங்க நினைக்கும் சொத்தை, அது ரியல் எஸ்டேட் சட்டமான RERA இன் வரம்பிற்குள் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜாக்சே கூறுகிறார். இருப்பினும், வங்கியின் ஏலச் சொத்தில் எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை.
மின் ஏல நாளில் ஆன்லைனில் ஏலம் (Online-Auction) விடப்படுகிறது. ஏலத்தில் உங்கள் ஏலத் தொகை அதிகமாக இருந்தால், அந்த சொத்து உங்களுக்கு ஒதுக்கப்படும். இதற்குப் பிறகு, நீங்கள் 15 நாட்களில் வங்கியில் உள்ள சொத்தின் மதிப்பில் 10 சதவீதத்தை செலுத்த வேண்டும்.
ALSO READ: Moratorium முடிந்தது: இந்த வழிகளில் உங்கள் கடன்களை எளிதாகக் கட்டலாம்!!