Canara Bank வாடிக்கையாளரா நீங்கள்? இதை செய்ய மறக்காதீர்கள்…..

தன் வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி ஒரு சிறப்பு வசதியை வழங்குகிறது. 2020 அக்டோபர் 5 முதல் டிசம்பர் 15 வரை வங்கி நாமினி நியமன பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 9, 2020, 07:16 PM IST
  • நாமினி என்பவர் பணம் அல்லது சொத்தின் பராமரிப்பாளர் மட்டுமே.
  • நாமினியும் சட்ட வாரிசும் ஒரே நபராகவும் இருக்கலாம்.
  • இந்த பிரச்சாரத்தில் மூத்த குடிமக்களுக்கு வங்கி சிறப்பு முன்னுரிமை அளித்துள்ளது.
Canara Bank வாடிக்கையாளரா நீங்கள்? இதை செய்ய மறக்காதீர்கள்…..  title=

பொதுத்துறையில் உள்ள கனரா வங்கியில் (Canara Bank) உங்களுக்கு கணக்கு உள்ளதா? ஆம் எனில், உங்கள் கணக்கில் யாரையேனும் நாமினியாக சேர்த்துள்ளீர்களா? இல்லையென்றால், இந்த அவசர வேலையை விரைவாக செய்து முடிக்கவும். உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு நாமினி கண்டிப்பாக இருக்க வேண்டும். அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி ஒரு சிறப்பு வசதியை வழங்குகிறது. 2020 அக்டோபர் 5 முதல் டிசம்பர் 15 வரை வங்கி இதற்கான நியமன பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

இந்த நாமினேஷன் பிரச்சாரம், இதுவரை தங்கள் கணக்குகளில் நாமினிக்களை சேர்க்காத வாடிக்கையாளர்களுக்காக நடத்தப்படுகின்றது. மேலும், நீங்கள் விரும்பினால், உங்கள் நாமினியை (Nominee) மாற்றவும் செய்யலாம். இந்த பிரச்சாரத்தில் மூத்த குடிமக்களுக்கு வங்கி சிறப்பு முன்னுரிமை அளித்துள்ளது.

நாமினிகளை பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் தங்கள் ஹோம் பிரான்சுக்கு செல்ல வேண்டும். உங்களுக்கு எத்தனை கணக்குகள் கனரா பேங்கில் உள்ளனவோ அவற்றிற்கு நீங்கள் நாமினிகளை சேர்க்கலாம். உங்கள் மொபைல் வங்கி (Mobile Banking) அல்லது இணைய வங்கி (Net Banking) மூலமாகவும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ALSO READ: மாறியது NPS விதிகள்.. ஓய்வூதியத்துடன் கோடீஸ்வராகும் வாய்ப்பை கொடுக்கும் NPS ..!!!

கணக்கில் ஒரு நாமினி இருப்பது முக்கியம்

நிபுணர்களின் கூற்றுப்படி, எந்தவொரு கணக்கு அல்லது சொத்தின் உரிமையாளரின் மரணத்திற்குப் பிறகும் நாமினிக்கு ஒரு பெரிய பங்கு இருக்கிறது. வாடிக்கையாளர் அல்லது உரிமையாளர் தனது நாமினியை நியமிக்கவில்லை என்றால், வாடிக்கையாளருக்குப் பிறகு அவரது பணம் நீண்ட காலத்திற்கு யாருக்கும் பயனில்லாமல் சிக்கிக்கொண்டிருக்கலாம். பின்னர் அது சட்டசிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். அதுவே கணக்கில் ஒரு நாமினி இருந்தால், எல்லாம் எளிதாகிவிடும்.

இவர்களில் யாராவது உங்கள் நாமினி ஆகலாம்

இந்த பிரச்சாரத்தில், கனரா வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் மனைவி, குழந்தைகள், தாய், தந்தை, வேறு ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது யாராவது ஒரு நண்பர் என இவர்களில் யாரையாவது நாமினியாக்கலாம்.

நாமினி என்பவர் பணம் அல்லது சொத்தின் பராமரிப்பாளர் மட்டுமே.

உங்கள் பணத்தின் மேல் அவருக்கு உரிமை இல்லை. உங்களுக்குப் பிறகு உங்கள் சட்டப்பூர்வ வாரிசுக்கு பணத்தை நாமினி ஒப்படைக்க வேண்டும். நாமினியும் சட்ட வாரிசும் ஒரே நபராகவும் இருக்கலாம்.

ALSO READ: Amazon Great Indian Festival: எந்த phone-ல் எவ்வளவு discount? பாருங்க, வாங்குங்க, கொண்டாடுங்க!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News