70,000 கோடி பாசன ஊழலில் இருந்து விடுவிக்கப்பட்டாரா அஜித்?

70,000 கோடி ரூபாய் பாசன ஊழலில், மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 20 FIR-களில் 9 கைவிடப்பட்டதாக தவகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Nov 25, 2019, 04:52 PM IST
  • ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதும் என்றிலிருந்து என்றென்றும், என்றென்றும், என்றென்றும். தற்காலிக முதல்வர் தன்னை தற்காலிகமாக தூய்மையானவராக காண்பித்துக்கொள்ள முதல் உத்தரவில் கையெழுத்திட்டார்?
70,000 கோடி பாசன ஊழலில் இருந்து விடுவிக்கப்பட்டாரா அஜித்? title=

70,000 கோடி ரூபாய் பாசன ஊழலில், மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 20 FIR-களில் 9 கைவிடப்பட்டதாக தவகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ்-NCP ஆட்சியின் போது நடைப்பெற்றதாக கூறப்படும் இந்த மோசடி சுமார் ரூ.70,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மகாராஷ்டிராவில் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை ஒப்புதல் மற்றும் செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பானது என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சனியன்று பாஜக-வுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியமைத்த அஜித் பவார், தற்போது துணை முதல்வர் நாற்காலியில் இருந்து தன் மீதான ஊழல் வழக்குகளை ரத்து செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த செய்திய இணையத்தில் வெளியான சில நொடிகளிலேயே., சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் பக்கத்தில் துணை முதல்வரை அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., “ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதும் என்றிலிருந்து என்றென்றும், என்றென்றும், என்றென்றும். தற்காலிக முதல்வர் தன்னை தற்காலிகமாக தூய்மையானவராக காண்பித்துக்கொள்ள முதல் உத்தரவில் கையெழுத்திட்டார்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுகுறித்து மகாராஷ்டிரா ஊழல் தடுப்பு பணியகம் (ACB) டி.ஜி., பரம்பீர் சிங் தெரிவிக்கையில்., இன்று மூடப்பட்ட வழக்குகள் எதுவும் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தொடர்பானது அல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும்., நீர்ப்பாசனம் தொடர்பான புகார்களில் சுமார் 3000 டெண்டர்களை விசாரித்து வருகிறோம். இவை வழக்கமான விசாரணைகள், அவற்றுள் தேவையற்றவை மூடப்பட்டுள்ளன, மேலும் நடந்துகொண்டிருக்கும் விசாரணைகள் அனைத்தும் முந்தையதைப் போலவே தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இன்று மூடப்பட்ட வழக்குகள் நிபந்தனைக்குட்பட்டவை என்றும், கூடுதல் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தால் வழக்குகள் மீண்டும் திறக்கப்படலாம் அல்லது நீதிமன்றங்கள் மேலதிக விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் மகாராஷ்டிரா ஊழல் தடுப்பு பணியக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News