Paytm மூலம் ரூ.1000 வரை வட்டியில்லா கடன் வாங்கலாம்

ரூ.1000 வரையிலான உடனடி கடன்களை வழங்கும் நோக்கத்தின் கீழ் பேடிஎம் நிறுவனம் போஸ்ட்பெய்ட் மினி என்கிற சேவையை அறிமுகம் செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 11, 2021, 02:02 PM IST
Paytm மூலம் ரூ.1000 வரை வட்டியில்லா கடன் வாங்கலாம் title=

Paytm அதன் போஸ்ட்பெய்ட் மினி என்கிற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் இணைந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Buy Now, Pay Later சேவையின் விரிவாக்கமாகும். 

பேடிஎம்மின் போஸ்ட்பெயிட் மினி உடனடி கடன்களை மிகவும் விரைவாக வழங்கும். Paytm நிறுவனத்தின் கூற்றுப்படி தற்போதைய கொரோனா பரவல் காரணமாக விதிக்கபட்ட ஊரடங்கு காலங்களில் பணப்புழக்கத்தை பராமரிக்கவும், வீட்டு செலவுகளை நிர்வகிக்கவும் இது உதவும்.

ALSO READ | Paytm வழங்கும் பம்பர் சலுகை ரூ .50 கோடி வரை Cashback பெற வாய்ப்பு

போஸ்ட்பெய்ட் மினி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், Paytm உங்களுக்கு ரூ.250 முதல் ரூ.1000 வரையிலான கடன்களுக்கான கடன் உதவியை வழங்குகிறது. இதில் கூடுதலாக Paytm Postpaid இன் இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆக ரூ.60,000 வரை கிடைக்கும். இதன் கீழ் மொபைல் மற்றும் DTH ரீசார்ஜ்கள், கேஸ் சிலிண்டர் முன்பதிவு, மின்சாரம் மற்றும் வாட்டர் பில்கள், ஷாப் ஆன் பேடிஎம் மால் உட்பட பலவற்றையும் நீங்கள் சேர்க்கலாம்.

இந்த சேவையின் மூலம், 0% வட்டியின் கீழ் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு Paytm போஸ்ட்பெய்ட் வசதியானது 30 நாட்கள் வரை காலத்தை வழங்குகிறது. இதில், குறைந்தபட்ச கன்வினியன்ஸ் கட்டணம் மட்டுமே இருக்கும். மேலும்  Paytm Postpaid மூலம், நீங்கள் நாடு முழுவதும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வணிக கடைகளில் பணம் செலுத்தலாம். 

ALSO READ | LPG Cylinder Offer: 10 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்; பேடிஎம் டக்கரான ஆஃபர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News