2021 மே 3 திங்கட்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் விலை விலையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து 17 நாட்களுக்கு மேல் எரிபொருள் விலைகள் மாறாமல் உள்ளன.
டெல்லியில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ .90.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ .80.73 ஆகவும் இருப்பதாக இந்திய எண்ணெய் கழகம் (IOC) தெரிவித்துள்ளது. மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .96.83 ஆகவும், டீசல் லிட்டருக்கு. 87.81 ஆகவும் உள்ளது என்று அரசு நடத்தும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது, நான்கு மெட்ரோ நகரங்களில் மும்பையில் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேறுபடுகிறது.
முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை விவரம்:
நகரம் | நேற்றைய விலை | இன்றைய விலை |
சென்னை | 92.43 | 92.43 |
தில்லி | 90.40 | 90.40 |
மும்பை | 96.83 | 96.83 |
கொல்கத்தா | 90.62 | 90.62 |
முக்கிய நகரங்களில் டீஸல் விலை விவரம்:
நகரம் | நேற்றைய விலை | இன்றைய விலை |
சென்னை | 85.75 | 85.75 |
தில்லி | 80.73 | 80.73 |
மும்பை | 87.81 | 87.81 |
கொல்கத்தா | 83.61 | 83.61 |
ALSO READ: முகக்கவசம் அணியாவிட்டால் ஏப்ரல் 10 முதல் பெட்ரோல் டீசல் கிடையாது: பெட்ரோலிய வணிகர் சங்கம்
அரசு நடத்தும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, அந்நிய செலாவணி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, உள்நாட்டு எரிபொருள் (Fuel) விலைகளை உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளுடன் ஒத்திசைக்கின்றன. எரிபொருள் விலையில் புதிய மாற்றங்கள் ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் செயல்படுத்தப்படும்.
இதற்கிடையில், ஏப்ரல் 30, வெள்ளிக்கிழமை, உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் கச்சா ஃயூச்சர்ஸ் 1.21 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 67.73 டாலராக இருந்தது. வெள்ளியன்று இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக இரண்டு ரூபாய் குறைந்து 74.09 ஆக இருந்தது.
ALSO READ: Petrol Price Today: பெட்ரோல், டீசலின் இன்றைய விலை நிலவரம் என்ன?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR