Poultry Farm Business Idea In Tamil: கோழி பண்ணையை ஆங்கிலத்தில் Poultry farming என்று கூறுவர். இந்த பண்ணையில் கோழிகளை மட்டுமல்ல, அதனுடன் சேர்த்து, வாத்து, வான்கோழி ஆகியவற்றையும் வளர்க்கலாம். இறைச்சிக்காக அல்லது முட்டைக்காக இந்த பண்ணைகள் செயல்படுத்தப்படுகின்றன. கோழி பண்ணைகளில் இருந்து வரும் பொருட்கள் இயற்கையானதாக இருப்பதால் பெரும்பாலான சமயங்களில் அவை சரியான வாடிக்கையாளர்களை சென்றடைகின்றான. வீட்டில் கொஞ்சம் இடமும், கையில் கொஞ்சம் பணமும் இருந்தாலே போதும், ஈசியாக இந்த தொழிலை தொடங்கலாம்.
தமிழ்நாடும் கோழி உற்பத்தியும்..
இந்தியாவை பொறுத்தவரை ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவந்ர் இந்த தொழிலை தொடங்கினாலும், அவருக்கு இது லாபத்தையே தேடி தந்துள்ளது. சிலர், ஏற்றுமதி இறக்குமதி சந்தையிலும் தங்களது கோழிக்களையும் கோழி இறைச்சிகளையும் நல்ல விலைக்கு விற்கின்றனர். அதிலும், கோழி முட்டை உற்பத்தியில் தமிழ்நாடுதான் இரண்டாம் இடத்தில் இருப்பதாக ஒரு தரவு தெரிவிக்கிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கோழி மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்கள் இந்தியாவிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
கோழி பண்ணையில் எப்படி லாபம் வருகிறது?
ஒரு ஆரோக்கியமான கோழி, ஒரு வாரத்திற்கு சராசரியாக 4 முதல் 7 முட்டைகள் போடுவதாக கூறப்படுகிறது. இது, அந்த கோழியின் ஆரோக்கியத்தை பொறுத்து அமையும். ஒரு சில கோழிகள், வருடத்திற்கு, 325 முட்டைகள் வரை இடுகின்றான. இந்த முட்டைகள் பொறிவதற்கு 21 நாட்கள் ஆகும். இந்த கணக்கின் படி 500 கோழிகளை வளர்த்தால் அவை 40 நாட்களில் 12 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை பெற முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மிகவும் இலாபகரமான விலையில் விற்பனை:
கோழி பண்ணையில் இருந்து நாம் முதலீடு செய்வதை விட பல மடங்கு வருமானம் பார்க்கலாமாம். நன்கு வளர்ந்த கோழி, ரூ130 முதல் 200 வரை விற்கப்படுகிறது. ஒரு கோழிக்கு சுமார் ரூ150 ரூபாய் மதிப்பு என வைத்துக்கொண்டால், 10 கோழிகள் வளர்த்தாலும் இதற்கிடையே கோழி முட்டை விற்பனையும் நடைபெறும். 10 கோழிகள் விற்றாலும் 1,500 ரூபாய் வரை லாபம் வரும்.
மேலும் படிக்க | மிஸ் பண்ணிடாதீங்க.. FDல் அதிக வட்டியை அள்ளித்தரும் வங்கி, டபுள் வருமானம் நிச்சயம்
முட்டை விற்பனை:
முட்டை விற்பனையும் இதில் அமோகமாக இருக்கும். நாட்டு முட்டை பிரியர்கள் பலர் நம் ஊரில் உள்ளனர். சாதாரண முட்டைகளை விட, நாட்டு முட்டைகளுக்கு விலையும் அதிகம். ஒரு மாதத்திற்கு விற்கப்படும் முட்டை வருமானத்திலும் நல்ல லாபம் பார்க்கலாம்.
கோழிப்பண்ணை வைப்பதற்கு முதலீடு எவ்வளவு தேவைப்படும்?
இந்தியாவை பொறுத்தவரை சிறிய அளவில் கோழிப்பண்ணை வைக்க எண்ணினால், அதற்கு ரூ.1, 50,000 ஆயிரம் குதல் 3,50,000 வரை முதலீட்டிற்கு தேவைப்படலாம். இதுவே, பெரிய அளவில் வைக்க விரும்பினால், அதற்கு ரூ.7 லட்சம் முதல் 10 லட்சம் வரை முதலீடு தேவைப்படலாம். இது மட்டுமன்றி, நீங்க்ள தேர்ந்தெடுக்கும் இடத்தை பொறுத்தும் இந்த முதலீட்டு பணத்தில் மாற்றங்கள் ஏற்படாலம். தமிழ்நாட்டை பொறுத்தவரை, 1000 கோழ்களை வளர்த்தால் மாதம் 40ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை லாபம் பார்க்கலாம் என கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ