ஒப்பந்தத்திலிருந்து இந்தியாவை விலக்கிய ஈரான்: இதில் சீனாவின் சதி உள்ளதா?

ஆப்கானிஸ்தானின் எல்லையில், சபாஹர் துறைமுகத்திலிருந்து ஜாகேடன் வரை ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஈரானும் கையெழுத்திட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரானிய அரசாங்கம் தான் மட்டும் கட்டுமானத்தைத் தொடர முடிவு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 14, 2020, 05:33 PM IST
  • இந்தியாவின் தரப்பில் நிதி வரவிலும் செயல்திட்டத்தை துவக்குவதிலும் ஏற்பட்ட தாமதத்தை ஈரான் இதற்கு காரணமாகக் காட்டியுள்ளது.
  • அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாகக்கூடும் என்ற ஐயம் இந்தியாவிற்கு உள்ளது.
  • ஈரானும் சீனாவும் 25 ஆண்டுகால செயலுத்தி கூட்டாளித்துவத்தை இறுதி செய்யும் நிலையில் உள்ளன.
ஒப்பந்தத்திலிருந்து இந்தியாவை விலக்கிய ஈரான்: இதில் சீனாவின் சதி உள்ளதா? title=

ஆப்கானிஸ்தானின் (Afganistan) எல்லையில், சபாஹர் துறைமுகத்திலிருந்து (Chabahar Port) ஜாகேடன் வரை ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் (India) ஈரானும் கையெழுத்திட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரானிய (Iran) அரசாங்கம் தான் மட்டும் கட்டுமானத்தைத் தொடர முடிவு செய்துள்ளது. இந்தியாவின் தரப்பில் நிதி வரவிலும் செயல்திட்டத்தை துவக்குவதிலும் ஏற்பட்ட தாமதத்தை ஈரான் இதற்கு காரணமாகக் காட்டியுள்ளது.

கடந்த வாரம், ஈரானிய போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முகமது எஸ்லாமி 628 கி.மீ. சபஹர்-ஜாகேடன் தள அமைப்பு செயல்முறையை துவக்கிவைத்தார். இது ஆஃப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள ஸாரஞ் வரை தொடரும். இந்தப் பணித்திட்டம் 2022 மார்ச்சிற்குள் நிறைவடையும் என கூறப்படுகிறது. ஈரானிய தேசிய மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 400 மில்லியன் டாலர்களைப் பயன்படுத்தி ஈரானிய ரயில்வே, இந்தியாவின் உதவியின்றி இந்த பணித்திட்டத்தை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனா ஈரானுடன் 25 ஆண்டுகளுக்கான, 400 பில்லியன் டாலர் மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஈரான் இந்தியாவுடான இணைப்பை துண்டித்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஈரானிய ரயில்வே மற்றும் அரசுக்கு சொந்தமான இந்திய ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் (IRCON) ஆகியவற்றுக்கு இடையே விவாதிக்கப்பட்டு வந்த இந்த ரயில்வே திட்டம், இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான முத்தரப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கொள்ளப்பட்டது. ஆஃப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கு ஒரு மாற்று வர்த்தக பாதையை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகவும் இது பார்க்கப்பட்டது.

மே 2016 இல், ஈரானிய அதிபர் ரூஹானி மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் கானியுடன் சபாஹர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட தெஹ்ரான் பயணத்தின் போது, IRCON ஈரானிய ரயில் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான முத்தரப்பு ஒப்பந்தத்தில் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து வழிப்பாதையின் ஒரு பகுதியாக சபஹார்-ஜாகேதன் ரயில்வேயை நிர்மாணிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தது. IRCON இந்த திட்டத்திற்கான அனைத்து சேவைகளையும், சூப்பர் ஸ்ட்ரக்சர் பணிகளையும், சுமார் 6 1.6 பில்லியன் நிதியுதவியையும் வழங்குவதாக உறுதியளித்தது.

இருப்பினும், IRCON பொறியியலாளர்களின் பல வருகைகள் மற்றும் ஈரானிய இரயில்வேயின் ஏற்பாடுகள் இருந்தபோதிலும், இந்தியா இந்தப் பணிகளை உடனடியாகத் துவக்கவில்லை. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாகக்கூடும் என்ற ஐயமே இதற்குக் காரணம். அமெரிக்கா, சபாஹர் துறைமுகம் மற்றும் இரயில் பாதைக்கு பொருளாதாரத் தடை தள்ளுபடி அளித்திருந்தது. ஆனால் அமெரிக்காவின் கோவத்திற்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தில் யாரும் உபகரணங்களை கொடுக்கவோ விற்கவோ முன்வராததும் ஒரு பெரிய தடையாக இருந்தது. அமெரிக்க பொருளாதாரத் தடைகள் காரணமாக இந்தியா ஏற்கனவே ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியுறவு அமைச்சகம் மற்றும் IRCON இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

ALSO READ: நேபாளத்தில் வலுவாக கால் ஊன்ற சீன கடைபிடித்த தந்திரம் என்ன…!!!

IRCON இல்லாமல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், IRCON உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டபோது, இந்தியா பிற்பகுதியில் இதில் சேரலாம் என்று  ஒரு அதிகாரி கூறினார்.

இதற்கிடையில், விஷயங்களை மேலும் சிக்கலாக்கும் வகையில், ஈரானும் சீனாவும் (China) 25 ஆண்டுகால செயலுத்தி கூட்டாளித்துவத்தை இறுதி செய்யும் நிலையில் உள்ளன. இதில் சபாஹரின் தீர்வை இல்லா மண்டலம் மற்றும் அருகிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் சீன ஈடுபாடு மற்றும் சபாஹர் துறைமுகத்திலும் ஒரு பெரிய பங்கு ஆகியவை அடங்கும்.

தெஹ்ரான் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள அதிகாரிகளால் இறுதி செய்யப்பட்ட 18 பக்க “ஈரானுக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான விரிவான திட்டத்தின்” கசிந்த பதிப்புகளின்படி, உள்கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் எரிசக்தி மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், துறைமுகங்களை புதுப்பித்தல், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பிற அமைப்புகளில் கூட்டுறவு இருக்கும். மற்றும் 25 ஆண்டுகளுக்கு சீனாவிற்கு ஈரான் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான உறுதி அளிக்கும். 

Trending News