PPF: மத்திய அரசு மேற்கொண்டுள்ள 5 முக்கிய மாற்றங்கள்

PPF கணக்கில் எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், புதிய விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். சிறுசேமிப்பு திட்ட விதிகள் அவ்வப்போது அரசால் மாற்றப்பட்டு வருகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 7, 2022, 05:51 PM IST
  • PPF கணக்கிற்கு எதிரான கடன்.
  • பிபிஎஃப் கணக்கை 15 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடரலாம்.
  • தொகையை மாதம் ஒருமுறை டெபாசிட் செய்யலாம்.
PPF: மத்திய அரசு மேற்கொண்டுள்ள 5 முக்கிய மாற்றங்கள் title=

PPF திட்டத்தில் முதலீடு  செய்துள்ளவர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்குத் தான். PPF கணக்கில் எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், புதிய விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். சிறுசேமிப்பு திட்ட விதிகள் அவ்வப்போது அரசால் மாற்றப்பட்டு வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், இந்த மாற்றங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் இந்த மாற்றங்கள் சில நேரங்களில் சிறிய மாற்றங்களாகவும் சில நேரங்களில் முக்கியமானதாகவும் இருக்கும். மற்றொரு சிறு சேமிப்பு திட்டமான செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்னும் சுகன்யா சம்ரிதி யோஜனாவில் (SSY) செய்யப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டது. இதேபோல், PPF தொடர்பான சில விதிகளையும் அரசாங்கம் மாற்றியுள்ளது. PPF தொடர்பான 5 மாற்றங்களைப் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

PPF கணக்கிற்கு எதிரான கடன்

நீங்கள் பிபிஎஃப் கணக்கிற்கு எதிராக கடன் வாங்க விரும்பினால், விண்ணப்பிக்கும் தேதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கணக்கில் உள்ள பிபிஎஃப் நிலுவைத் தொகையில் 25 சதவீதத்தில் மட்டுமே கடனாக பெற முடியும். 31 மார்ச் 2022 அன்று நீங்கள் கடனுக்கு விண்ணப்பித்தீர்கள் எnறால், இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் (மார்ச் 31, 2020), பிபிஎஃப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் இருந்தால், அதில் 25 சதவீதம் அதாவது 25 ஆயிரம் ரூபாயை கடன் பெறலாம்.

மேலும் படிக்க | LIC பங்குதாரர்களுக்கு நல்ல செய்தி: ஈவுத்தொகை கிடைக்கவுள்ளது, விவரம் இதோ

வட்டி விகிதம் குறைப்பு

பிபிஎஃப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் கடன் வாங்கினால், வட்டி விகிதம் 2 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடனின் அசல் தொகையை செலுத்திய பிறகு, நீங்கள் இரண்டு தவணைகளுக்கு மேல் வட்டி செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி முதல் வட்டி கணக்கிடப்படுகிறது.

பிபிஎஃப் கணக்கை 15 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடரலாம்

15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முதலீடு செய்யத் தயாராக இல்லை என்றால், இந்தக் காலக்கெடுவிற்குப் பிறகும் முதலீடு இல்லாமல் உங்கள் PPF கணக்கைத் தொடரலாம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. முதிர்ச்சியடைந்த பிறகு, நீங்கள் PPF கணக்கை நீட்டிக்க விரும்பினால், நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.

கணக்கைத் திறக்க நிரப்ப வேண்டிய படிவம்

PPF கணக்கைத் தொடங்க, இப்போது படிவம்-A (Form-A)க்குப் பதிலாக படிவம்-1 (Form-1) சமர்ப்பிக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிஎஃப் கணக்கை நீட்டிக்க, முதிர்வுக்கு ஒரு வருடம் முன்பு, படிவம் H க்குப் பதிலாக படிவம்-4 -ஐ நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

தொகையை மாதம் ஒருமுறை டெபாசிட் செய்யலாம்

பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்யும் ரூ.50 மடங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் தொகை ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 500 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் PPF கணக்கில், ஒரு வருடம் முழுவதும் 1.5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இதில் மட்டுமே வரி விலக்கு பலன் கிடைக்கும். இது தவிர, நீங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே PPF கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.

மேலும் படிக்க | State Bank Vs Post Office: எந்த வங்கியின் RD சிறந்தது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News