புதிதாக உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 40,000!

2019-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தனியார் துறையால் உருவாக்கப்பட்ட புதிய வேலைகளின் எண்ணிக்கை 40,000-ஐ எட்டியுள்ளது!

Last Updated : Oct 4, 2019, 03:40 PM IST
புதிதாக உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 40,000! title=

2019-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தனியார் துறையால் உருவாக்கப்பட்ட புதிய வேலைகளின் எண்ணிக்கை 40,000-ஐ எட்டியுள்ளது!

இது இலவச மண்டலங்களில் உள்ள வேலைகளைத் தவிர்த்து, தேசிய பொருளாதாரத்தில் நேர்மறையான முன்னேற்றங்களால் ஆதரிக்கப்படும் தொழிலாளர் சந்தையின் செயல்பாட்டை பிரதிபலிக்கிறது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக மத்திய வங்கியின் கூற்றுப்படி, தேசிய பொருளாதாரம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நிலையான விலையில் ஆண்டுக்கு வளர்ச்சி 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

தனியார் துறை தொடர்ந்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது, முதல் காலாண்டில் 5.06 மில்லியன் தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது, ​​2019-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அதன் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையை 5.1 மில்லியன் தொழிலாளர்களாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சின் புள்ளிவிவரங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.,  ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொழிலாளர் சந்தையில் சேர்க்கப்பட்ட புதிய வேலைகளின் எண்ணிக்கை 137,000-ஐ எட்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆவணப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து பொருளாதார நடவடிக்கைகள் 2019-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தனியார் துறை வேலைவாய்ப்பில் 1 சதவீதம் அதிகரிப்புக்கு பங்களித்தன, இது முந்தைய காலாண்டில் ஒப்பிடுகையில் 0.1 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வேலைவாய்ப்பு அதிகரிப்பது, ரியல் எஸ்டேட் மற்றும் பிற துறைகளில் ஏற்பட்ட எழுச்சியின் விளைவாகும், இதில் விவசாயம், சுரங்கம், ஹோட்டல், உணவகங்கள், தரகு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை அடங்கும்.

ரியல் எஸ்டேட் துறை மற்றும் பிற குறிப்பிடப்பட்ட துறைகளின் மதிப்பு 2019-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் முறையே 5 சதவீதம் மற்றும் 8.2 சதவீதம் அதிகரித்துள்ளது, இது முதல் காலாண்டில் 4.4 சதவீதம் மற்றும் 4.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 45.7 சதவீத பணியாளர்களைப் பயன்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News