தந்தை சொத்தில் மகளுக்கு உரிமை உள்ளதா... உண்மை என்ன?

Property Rights To Daughter: நம் நாட்டில், தந்தையின் சொத்தில் மகள்களின் உரிமைகள் தொடர்பான விதிகள் பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. பல பெண்கள் தங்களுக்கும் இந்த சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கருதுகிறார்கள். அதுகுறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 11, 2023, 03:08 PM IST
  • தந்தை சொத்துகளில் மகளுக்கு உள்ள உரிமை குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
  • இந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956இல் இயற்றப்பட்டது.
  • இச்சட்டத்தில் 2005இல் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
தந்தை சொத்தில் மகளுக்கு உரிமை உள்ளதா... உண்மை என்ன? title=

Property Rights To Daughter: தந்தையின் சொத்தில் மகள்களுக்கு உரிமை உள்ளதா என்ற கேள்விக்கு உங்களுக்கு இருந்தால், அதற்கு ஆம் மற்றும் இல்லை என இரண்டு பதில்கள் வந்து உங்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகிறதா?.

தந்தையின் சொத்தில் மகனை போலவே மகளுக்கும் சம உரிமை உண்டு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மகளுக்கு அதில் உரிமை இல்லை என்றும் சில இடங்களில் கூறப்படுகிறது. சமூகத்தில் பல்வேறு வகையான தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தந்தையின் சொத்தில் மகளுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறது என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. தந்தையின் சொத்தில் மகனைப் போலவே மகள்களுக்கும் உரிமை உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இருக்க தேவையில்லை, அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. 

மேலும் படிக்க | Pension பெறுபவர்களுக்கு ஜாக்பாட், அரசு எடுத்த மிகப்பெரிய முடிவு

நம் நாட்டில், தந்தையின் சொத்தில் மகள்களின் உரிமைகள் தொடர்பான விதிகள் பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. பல பெண்கள் தங்களுக்கும் இந்த சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கருதுகிறார்கள்.

இந்து வாரிசு உரிமைச் சட்டம் என்ன சொல்கிறது?

இந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956இல் சொத்து மீதான உரிமையை கோரவும் மற்றும் உரிமைகளுக்கான விதிகளுக்காகவும் இயற்றப்பட்டது. இதன்படி, தந்தையின் சொத்தில் மகனைப் போலவே மகளுக்கும் உரிமை உள்ளது. இந்த வாரிசு சட்டம் 2005இல் மாற்றப்பட்டு, மகள்களின் உரிமைகளை ஒருங்கிணைத்தது. இதில் தந்தையின் சொத்தில் மகளுக்கு உள்ள உரிமை குறித்த சந்தேகங்கள் நீக்கப்பட்டன.

சட்டப்படியான உரிமை

தந்தை சொந்தப் பணத்தில் நிலம் வாங்கியிருந்தால், அவர் வீடு கட்டியிருந்தால் அல்லது வாங்கியிருந்தால், மகள் தான் விரும்புபவருக்கு இந்த சொத்தை கொடுக்கலாம். தந்தை சம்பாதித்த சொத்தை தன் விருப்பப்படி யாருக்கும் கொடுப்பது சட்டப்படியான உரிமை. தந்தை தன் சொந்தச் சொத்தில் மகளுக்குப் பங்கு கொடுக்க மறுத்தால், மகளால் ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தந்தையின் சொத்தில் திருமணமான மகளின் உரிமை

2005 ஆம் ஆண்டு திருத்தத்திற்குப் பிறகு, மகள் வாரிசாக அதாவது சம வாரிசாகக் கருதப்படுகிறாள். இப்போது மகளின் திருமணத்திற்குப் பிறகும், தந்தைக்கு சொத்தின் வாரிசு உரிமை உள்ளது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதாவது, திருமணத்திற்குப் பிறகும் தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை உண்டு.

மேலும் படிக்க | Ration Card Online: புதிய ரேஷன் கார்டு வேண்டுமா? இந்த வழிகளில் எளிதாக பெறலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News