Bank Holiday Alert: அடுத்த வாரம் வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலை உங்களிடம் இருந்தால், வரும் வாரத்தில் 4 நாட்களுக்கு வங்கி மூடப்படும். இந்த விடுமுறைகளை மனதில் வைத்து உங்கள் வங்கி வேலைகளை நீங்கள் தீர்த்துக் கொண்டால் நல்லது.
அடுத்த வாரம் 4 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்
அடுத்த வாரம் ஜூன் 25 முதல் ஜூன் 30 வரை 4 நாட்கள் வங்கிகள் (Bank Holidays) மூடப்படும். குரு ஹர்கோபிந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள வங்கிகள் ஜூன் 25 ஆம் தேதி மூடப்படும் என்று ரிசர்வ் (Reserve Bank of India) வங்கியின் வங்கி விடுமுறை நாட்காட்டி தெரிவித்துள்ளது. இதன் பின்னர், ஜூன் 26 நான்காவது சனிக்கிழமையாக இருக்கும், எனவே நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருக்கும்.
ALSO READ| இனி விடுமுறை நாட்களிலும் சம்பளம் கிடைக்கும் -ரிசர்வ் வங்கி அதிரடி
இதன் பின்னர், ஜூன் 28 மற்றும் ஜூன் 29 ஆகிய தேதிகளில் வங்கிகள் எப்போதுபோல் இயங்கும். பின்னர் ஜூன் 30 அன்று அதாவது புதன்கிழமை, வங்கி மீண்டும் மூடப்படும். ஜூன் 30 ஆம் தேதி மெசோரத்தில் உள்ள ஈஸ்வாலில் வங்கிகள் மூடப்படும், இந்த நாளில் உள்ளூர் விழா ரம்னா லீ கொண்டாடப்படுகிறது.
ஜூன் மாதத்தில் வங்கிகள் எப்போது மூடப்படும்
ஜூன் மாதத்தில் மொத்தம் 9 விடுமுறைகள் உள்ளன, அவற்றில் 5 விடுமுறைகள் ஏற்கனவே முடிந்துவிட்டது, மீதமுள்ள 4 விடுமுறைகள் அடுத்த வாரம் விழும்.
ஜூன் மாதத்தில் விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல்
06 ஜூன் - ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 12 - மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
13 ஜூன் - ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 15- Y.M.A. நாள் மற்றும் ராஜ சங்கராந்தி (புவனேஷ்வரின் ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)
ஜூன் 20 - ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 25 - குரு ஹர்கோபிந்த் ஜியின் பிறந்த நாள் (ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டன)
ஜூன் 26 - மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
ஜூன் 27 - ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 30- ரம்னா நீ (மிசோரத்தின் ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்பட்டன)
ALSO READ | Old is Gold: இந்த ‘25’ பைசா உங்களிடம் இருந்தால், ₹1.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR