Smart Cylinder: இந்த சிலிண்டரில் கேஸ் எவ்வளவு இருக்குனு பார்க்கலாம் - வெடிக்காது..!

Smart Gas Cylinder : சிலிண்டர் விபத்துகளுக்கு என்டுகார்டு போடும் விதமாக இப்போது ஸ்மாரட் சிலிண்டர் வந்துவிட்டது. இதில் எரிவாயு எவ்வளவு இருக்கிறது என பார்த்து தெரிந்து கொள்வதுடன், வெடிக்கும் அபாயமும் இருக்காது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 8, 2024, 06:32 AM IST
  • ஸ்மார்ட் சிலிண்டர் இப்போது வந்தாச்சு
  • இனி கேஸ் எவ்வளவு இருக்கு என பார்க்கலாம்
  • வெடித்துவிடும் என்ற பயமே இனி வேண்டாம்
Smart Cylinder: இந்த சிலிண்டரில் கேஸ் எவ்வளவு இருக்குனு பார்க்கலாம் - வெடிக்காது..! title=

நாடு முழுவதும் தினம்தோறும் ஏதாவதொரு மூலையில் சிலிண்டர் விபத்து குறித்த செய்திகள் வெளியாவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனால், சிலிண்டர் வெடித்துவிடும் என்ற அச்சம் அதனை பார்க்கும்போதெல்லாம் உங்கள் மனதுக்குள் இருந்துகொண்டே இருக்கும். பலரும் இன்றளவும் சிலிண்டர் அருகில் கூட செல்வதை தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் அவர்களுக்குள் இருக்கும் ஒருவிதமான மனோ பயம் தான். அதேநேரத்தில் சிலிண்டர் எப்படி கையாள வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களுக்குள் இந்த பயம் இருக்காது. சிலிண்டர் விபத்தும் நடக்காது.

மேலும் படிக்க | UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும்

இருப்பினும் இப்படியான விபத்துகளுக்கு என்டுகார்டு போடும் விதமாக இப்போது ஸ்மார்ட் சிலிண்டர் எல்லாம் வந்துவிட்டது. இந்த சிலிண்டர் வெடிக்காது. மேலும், சிலிண்டரில் எவ்வளவு கேஸ் இருக்கிறது என்பதை கூட வாடிக்கையாளர்கள் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இத்தகைய சிலிண்டர்கள் மூன்று அடுக்குகளால் செய்யப்படுகின்றன. இவை உயர் அடர்த்தி பாலிஎதிலீன் (HDPE), பாலிமர் மூடப்பட்ட ஃபைபர் கண்ணாடி மற்றும் HDPE ஜாக்கெட் மூலம் வடிவமைக்கப்படுகின்றன. மூன்று அடுக்குகள் இருக்கும். இந்த சிலிண்டர்கள் எடையில் மிகவும் குறைவு. ஓபன் பாடி அமைப்பைக் கொண்டிருக்கும். 

இது சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு உள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். அவை துருப்பிடிக்காது, இதன் காரணமாக சிலிண்டரின் ஆயுள் இயல்பை விட அதிகமாக உள்ளது. இவை 5Kg மற்றும் 10Kg விருப்பங்களில் வருகின்றன. நீங்கள் Indane இன் மிக்ஸ்டு சில்ண்டர்களை சந்தையில் காணலாம். தற்போது இவற்றில் நுகர்வோருக்கு மானியம் கிடைப்பதில்லை. 10 கிலோ வகைக்கு, 3000 ரூபாயும், 5 கிலோ வகைக்கு, 2200 ரூபாயும் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். 

செக்யூரிட்டி டெபாசிட் செலுத்துவதன் மூலம் உங்கள் தற்போதைய இண்டேன் சிலிண்டரை ஸ்மார்ட் சிலிண்டருடன் மாற்றவும் முடியும். வீட்டிலும் டெலிவரி செய்யப்படுகிறது. நீங்கள் அதை பழைய சிலிண்டருடன் மாற்றலாம். இவை வெடிக்காதவை என அந்நிறுவனம் தனது இணையதளத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, சிலிண்டர்களைப் பயன்படுத்தும்போது வெடிக்கும் அபாயம் குறைவாக இருக்கும். வெடிக்கும் பயம் இருக்காது.

சிலிண்டர் விலை எவ்வளவு?

ஜூன் மாதத்துக்கான வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து உள்ளன. இதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.70.50 குறைந்து அதன் விலை ரூ.1,911-ல் இருந்து ரூ.1,840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் மாற்றம் இன்றி ரூ.818.50-க்கு விற்பனை ஆகி வருகிறது.

மேலும் படிக்க | இதுவும் கடன் தான்! ஆனா டக்குன்னு கிடைக்கும்... திருப்பி செலுத்துவதும் ரொம்ப சுலபம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News