புதுடெல்லி: டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தனது பயணிகள் வாகனங்களின் விலையை 2021 மே 8 முதல் உயர்த்தியுள்ளது. உள்நாட்டு வாகன உற்பத்தியாளர் மாறுபாடு மற்றும் மாடலைப் பொறுத்து ரூ .10,000 முதல் ரூ .36,000 வரை உயர்த்தியுள்ளார். ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டின் புது விலை விவரங்களை விரைவில் டாடா மோட்டார்ஸ் அறிவிக்க இருக்கிறது.
கடந்த சில நாட்களாக பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் தங்களது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும் இணைந்துள்ளது. உதிரிபாகங்கள் விலை உயர்வு, ஒட்டுமொத்த உற்பத்தியை சார்ந்த மூல பொருட்கள் விலை உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வியாபார பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.
எனினும், ஏற்கெனவே கார் புக் செய்த வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் மே 7ஆம் தேதி அல்லது அதற்கு முன் கார் புக் செய்தவர்களை விலை உயர்வு பாதிக்காது. மே 8ஆம் தேதி முதல் கார் புக் செய்வோருக்கு மட்டும் விலை உயர்வு பொருந்தும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாருதி சுசுகி, ஹூண்டாய், டொயோட்டா, போர்டு, பிஎம்டபிள்யூ, எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் வால்வோ உள்ளிட்ட நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்தன.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR