வருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவும் அல்லது வருமான வரி தாக்கலில் தவறு ஏதேனும் செய்தவர்கள், அதில் உள்ள தவறுகளை சரி செய்யவும் இன்னும் வாய்ப்பு உள்ளது. தாமதக் கட்டணத்தைச் செலுத்தி, 2024-25ம் ஆண்டிற்கான (AY 2024-25) உங்கள் வருமான வரி தக்கலை டிசம்பர் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்ற நிலையில், பம்பாய் உயர்நீதிமன்றம், மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் (CBDT) புதுப்பிக்கப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை, 2025 ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. 87A பிரிவின் கீழ் தகுதியுள்ள வரி செலுத்துவோருக்கு ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு CBDT-க்கு பம்பாய் உயர்நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.
பிரிவு 87Aகீழ் வரி விலக்கு கோர முடியாத நிலை
பிரிவு 87A இன் நோக்கம் தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகும். பழைய வரி முறையின் கீழ் ₹ 5 லட்சம் வரையிலும், புதிய வரி முறையின் கீழ் ₹ 7 லட்சம் வரையிலும் மொத்த வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ள தனிநபர்களுக்கு இது வருமான வரி விலக்கு அளிக்கிறது.
இந்நிலையில், 'தி சேம்பர் ஆஃப் டேக்ஸ் கன்சல்டன்ட்ஸ்' தாக்கல் செய்த ஒரு பொது நல வழக்கு (பிஐஎல்) ஜூலை 5 அன்று வருமான வரி தாக்கல் செயலி மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இதனால், வரி செலுத்துவோர் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 87A கீழ் விலக்கு கோர முடியாத நிலை ஏற்பட்டது என்று வாதிட்டது. 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான ரிட்டர்ன் தாக்கல் செய்யும் மென்பொருளில் செய்யப்பட்ட இந்த மாற்றங்கள் சட்டவிரோதமானது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவு
பம்பாய் உயர்நீதிமன்றம், “வருமான வரிச் சட்டத்தின் 119வது பிரிவின் கீழ் தேவையான அறிவிப்பை உடனடியாக வெளியிடவும், டிசம்பர் 31, 2024க்குள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை குறைந்தபட்சம் 2025 ஜனவரி 15 வரை நீட்டிக்கவும் மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு (CBDT) உத்தரவிடப்பட்டுள்ளது. பிரிவு 87A இன் கீழ் விலக்கு பெறத் தகுதியுடைய அனைத்து வரி செலுத்துவோருக்கும் அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வது முக்கியம்" என நீதிமன்றம் கூறியது.
மேலும் படிக்க | RBI புதிய விதி 2025: ஜனவரி 1 முதல் இந்த 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும்!
புதிய காலக்கெடுவை நாம் தவறவிட்டால் ஏற்படும் விளைவுகள்
2023-24 ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான புதிய காலக்கெடுவை வரி செலுத்துவோர் தவறவிட்டால், பல வகையான சிக்கல்கள் ஏற்படலாம்.
அபராதம் அதிகரிக்கலாம்: தாமதமாக தாக்கல் செய்தால் ₹10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
இலாப இழப்பு
வணிகம்/தொழில் இழப்புகள் மற்றும் மூலதன ஆதாயங்களை முன்னோக்கி கொண்டு செல்லும் வாய்ப்பு போன்றவை இழக்கப்படும்.
வட்டி: பிரிவு 234A இன் கீழ், ஒவ்வொரு மாதமும் 1% வட்டி தொடர்ந்து சேர்ந்து கொண்டே வரும்.
தாமதமாக ரிட்டன் தாக்கல் செய்யும் போது செலுத்த வேண்டிய தாமத கட்டண விபரம்:
1. ₹5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ₹5,000 தாமதக் கட்டணம்.
2. ₹5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு ₹1,000 தாமதக் கட்டணம்.
3. வருமானம் வரி விதிக்கக்கூடிய வரம்பிற்குக் குறைவாக இருந்தால், தாமதக் கட்டணம் வசூலிக்கப்படாது.
வரி முறையில் மாற்றம் இல்லை:
காலதாமதமான ரிட்டர்ன்களை தாக்கல் செய்யும் போது பழைய அல்லது புதிய வரி முறைகளில் எந்த மாற்றமும் அனுமதிக்கப்படாது.
2023-24 நிதியாண்டிற்கான தாமத வருமான வரியை தாக்க செய்ய , கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
1. முதலில் வருமான வரித் துறையின் e-filing போர்ட்டலில் லாக்-இன் செய்யவும்.
2. உங்கள் வருமானத்திற்கு ஏற்ப சரியான ITR படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. இதற்குப் பிறகு 2023-24 நிதியாண்டிற்கான 2024-25 என்ற மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுக்கவும் .
4. உங்கள் வருமானம், வருமான வரி விலக்கு மற்றும் வரிப் பொறுப்பு பற்றிய அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பவும்.
5. பின்னர், வட்டி மற்றும் அபராதம் உட்பட ஏதேனும் நிலுவையில் உள்ள வரியைச் செலுத்தவும்.
6. ஆதார் OTP, நெட் பேங்கிங் அல்லது நேரடி சரிபார்ப்பு மூலம் வெரிஃபை செய்த பிறகு வருமானத்தை சமர்ப்பிக்கவும்.
ITR சரியான நேரத்தில் தாக்கல் செய்தால், இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தவிர்க்கலாம். எனவே, வரி செலுத்துவோர், உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ள காலக்கெடுவை பயன்படுத்தி, உரிய நேரத்தில் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 2024ம் ஆண்டில் மத்திய அரசு தொடங்கிய... முத்தான சில மக்கள் நலத் திட்டங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ