LLR Apply at E- Sevai Centers in Tamil Nadu : 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சாலையில் வாகனம் இயக்க வாகன உரிமம் வைத்திருக்க வேண்டியது கட்டாயம். இதனை பெற இவ்ளவு நாள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கு லைசென்ஸ் பெற விண்ணப்பித்தால் முதலில் பழகுநர் உரிமம் பெற வேண்டும். அதன்பிறகு ஒருவரின் ஓட்டுநர் திறனை நேரடியாக பரிசோதனை செய்துவிட்டு லைசென்ஸ் கொடுக்கப்படும். இந்த முறையில் இப்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு (LLR) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இனிமேல் தமிழ்நாட்டில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பனை மாநில போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் 55,000-க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்களில் ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் எளிமையாக இன்று முதல் எல்.எல்.ஆர். பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | குழந்தைகளை ஆன்லைனில் உஷாராக பார்த்துக்கொள்வது எப்படி? இதோ டிப்ஸ்!
இது குறித்து மாநில போக்குவரத்து ஆணையர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு (எல்.எல்.ஆர் - LLR) விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்களில் ரூ. 60 கட்டணம் செலுத்தி ஒப்புதல் அளிக்கப்பட்ட LLR-ஐ பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். தொடர்ந்து அனைத்து மோட்டார் வாகனத்துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய அனைத்து சேவைகளையும் இ-சேவை மையம் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அறிவித்துள்ளார்.
அண்மையில் ஓட்டுநர் உரிமம் இனி விரைவு தபால் மூலம் மட்டுமே அனுப்பப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், அடுத்தக்கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது அரசின் அனைத்து துறைகளும் டிஜிட்டல் வடிவம் பெறும் வகையிலும், மக்களுக்கான சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையிலும் போக்குவரத்து துறை சார்பில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் போக்குவரத்து துறை அலுவலகங்களில் முறைகேடுகளை தடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | இன்னும் மூணு நாள் தான் இருக்கு... ஆதார் கார்டு அப்டேட் பண்ணிட்டீங்களா..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ