புதுடெல்லி: சொத்து விலைகள் கன்னாபின்னாவென அதிகரித்து இருக்கும் நிலையில், நடுத்தர மக்களுக்கு வீடு வாங்குவது எனப்து அவ்வளவு சுலபமாக இல்லை. வீடு வாங்குபவர்களில் பலர் வங்கியில் வீட்டுக் கடன் பெற்று, இஎம்ஐ மூலம் கடனை மாதந்தோறும் திருப்பிச் செலுத்துகின்றனர். பொதுவாக, மக்கள் ஒரு பெரிய தொகையை வீட்டுக் கடனாக எடுத்து நீண்ட காலத்திற்கு மாதாந்திர தவணைத் தொகை (Equated monthly installment, EMI) செலுத்துகிறார்கள். இதனால், நடுத்தர மக்கள் பல சமயங்களில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும், மேலும் கடன் தவணையை குறித்த நேரத்தில் செலுத்த முடியாத சூழ்நிலை உருவாகலாம்.
இந்த சூழ்நிலையில், OTS என்ற விருப்பத்தை அதாவது ஒரு முறை செட்டில்மென்ட் என்ற தெரிவை கடன் வாங்கியவர்கள் தேர்வு செய்யலாம். இருப்பினும், OTS தெரிவை தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக, கடன் வாங்கியிருக்கும் நிதி நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும். ஒரே முறையில் நிலுவைக்கடனை செட்டில்மெண்ட் செய்வதற்கான (one time settlement) காரணத்தை விளக்க வேண்டும். உங்கள் காரணம் சரியானது என கண்டறிந்தால், நீங்கள் ஒன் டைம் செட்டில்மென்ட் செய்து கடனை முடித்துக் கொள்ளலாம்.
ஒன் டைம் செட்டில்மென்ட் என்பது ஒரு நிதி நிறுவனம் அல்லது வங்கி மற்றும் அதன் கடனாளிகளுக்கு இடையேயான ஒரு சட்டப்பூர்வ ஒப்பந்தம் ஆகும். கடனுடன் தொடர்புடைய அனைத்து சட்ட மற்றும் நிதி சிக்கல்களை தீர்க்க ஒன் டைம் செட்டில்மென்ட் உதவுகிறது. OTS வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பிறகு, வங்கி அதன் ஒட்டுமொத்த வாராக் கடன் விகிதத்தைக் குறைத்து, அதன் இருப்புநிலைக் குறிப்பை சிறப்பாக நிர்வகிப்பதில் செயல்படுகிறது. கடன் வாங்குபவர் தனது வணிகம் மற்றும் நிதியின் சிறந்த நிர்வாகத்தை செய்ய ஒன் டைம் செட்டில்மென்ட் உதவுகிறது.
ஒரே முறையில் கடனை செட்டில்மெண்ட் செய்வதற்கான நன்மைகள் மற்றும் தீமைகள் என்னவென்று தெரிந்துக் கொள்வோம்.
OTS இன் நன்மைகள்
OTS மூலம் உங்கள் கடனைத் தீர்க்கும் போது, கடனாளியும் வங்கியும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து, கடன் வாங்கியவர் ஒரே நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையைத் தீர்மானித்துக் கொண்டு அதை திருப்பிச் செலுத்திவிடுவதால், மாதாந்திர EMI தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
OTS இன் தீமைகள்
ஒன் டைம் செட்டில்மென்ட் சந்தேகத்திற்கு இடமின்றி அந்த நேரத்தில் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் உங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது, ஆனால் அதில் சில சிக்கலும் உள்ளது. அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | 2000 ரூபாய் நோட்டு தொடர்பான புதிய அப்டேட் தந்த ரிசர்வ் வங்கி
CIBIL மதிப்பெண்
கடன் செட்டில்மென்ட் செய்த பிறகு, இது தொடர்பான தகவலை CIBIL அமைப்புக்கு வங்கி அனுப்பிவிடும். கடன் செட்டில்மென்ட் என்பது, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கடனாளியிடம் பணம் இல்லை என்று கருதப்படுகிறது, இதன் அடிப்படையில் கடன் வாங்கியவரின் CIBIL ஸ்கோர் மதிப்பீடு குறைகிறது.
உங்கள் CIBIL மதிப்பெண் 75-100 புள்ளிகள் குறையலாம். கடன் வாங்கியவர் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கணக்குகளை செட்டில் செய்தால், கிரெடிட் ஸ்கோர் மேலும் குறையலாம். அடுத்த 7 ஆண்டுகளுக்கு கடன் அறிக்கையின் கணக்கு நிலைப் பிரிவில் கடனாளியின் கடன் தீர்வு பற்றிய குறிப்பு இருக்கக்கூடும். இதற்குப் பிறகு, கடன் வாங்கியவர் அடுத்த 7 ஆண்டுகளுக்கு கடனுக்கு விண்ணப்பிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம். நீங்கள் வங்கியாலும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படலாம்.
OTS தெரிவை எப்போது தேர்வு செய்ய வேண்டும்?
கடனை திருப்பி அடைக்க உங்களிடம் வேறு எந்த வழியும் இல்லாத போது மட்டுமே கடனைக் ஒரு முறையில் செட்டில்மெண்ட் செய்யும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். பணத்தை செலுத்தி கடனை முடித்த பிறகுக், அது தொடர்பான சான்றிதழை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தைத் தெரிந்துக் கொள்ளுங்கள். சில காரணங்களால் நீங்கள் ஓடிஎஸ் தெரிவை தேர்ந்தெடுத்து கடனைத் தீர்த்துவிட்டாலும், எதிர்காலத்தில் உங்களிடம் பணம் இருந்தால், தீர்வு காலத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட தள்ளுபடியை (அசல், வட்டி, அபராதம் மற்றும் பிற கட்டணங்கள்) நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | கடன் வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி: RBI ரெப்போ விகிதம் குறித்து வந்த பெரிய தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ