புதுடெல்லி: ஏதோ ஒரு கட்டத்தில், நாம் அனைவரும் எங்கள் வாட்ஸ்அப் க்ரூப் சாட் நோடிஃபிகேஷனால், எரிச்சல் அடைந்திருப்போம். இந்த சாட்களை ம்யூட் செய்ய அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச காலம் ஒரு வருடம் மட்டுமே என்ற நிலை இப்போது மாறிவிட்டது
வாட்ஸ்அப் இப்போது பயனர்களுக்கு ஒரு சேட்டை எப்போதும் ம்யூட் செய்யும் ஆப்ஷனை வழங்கியுள்ளது, மகிழ்ச்சியான நெட்டிசன்கள் ‘நன்றி Zuck மாமா’ என மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர்
இந்த புதிய அம்சத்தைப் பெற, பயனர்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும்
முன்னதாக, பயனர்கள் ஒரு தனிநபரை அல்லது குழு அரட்டையை எட்டு மணி நேரம், ஒரு வாரம் அல்லது ஒரு வருடம் முடக்குவதற்கு மட்டுமே ஆப்ஷன் வழங்கப்பட்டிருந்தது. முடக்கு அரட்டை அமைப்புகள் இப்போது ‘8 மணிநேரம்’, ‘1 வாரம்’ மற்றும் ‘எப்போதும்’ ஆப்ஷனை (8 Hours, 1 week and Always) காண்பிக்கின்றன, முதலில் ‘1 year’ என்பதற்கு பதிலாக Always என்ற ஆப்ஷன் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.
இது 2020 ஆம் ஆண்டின் சிறந்த செய்தியாக ட்விட்டரில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகின்றனர் நெட்டிஸன்கள்.
#WhatsApp finally gives a forever mute option.
I can now live, sleep and eat peacefully pic.twitter.com/t1zKLmlcwJ
— Sarcastically Courteous (@Agnum_Athena) October 23, 2020
Thanks @WhatsApp for this... Much needed...#WhatsApp pic.twitter.com/slXPh3eWcR
— Arun Prabhudesai (@8ap) October 23, 2020
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR