ரயில் சாப்பாடு பிடிக்கவில்லையா; IRCTC உணவு இன்ஸ்பெக்டரிடம் புகார் அளிக்கலாம்

பிப்ரவரியில் ரயில்வே கேட்டரிங் சேவைக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், ரயில்களில் போர்வைகள், பெட்ஷீட்கள் போன்ற பொது பயன்பாட்டு பொருட்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இ-கேட்டரிங் சேவைகளை அரசாங்கம் முற்றிலுமாக தடை செய்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 14, 2021, 03:28 PM IST
  • பிப்ரவரியில் ரயில்வே கேட்டரிங் சேவைக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், ரயில்களில் போர்வைகள், பெட்ஷீட்கள் போன்ற பொது பயன்பாட்டு பொருட்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இ-கேட்டரிங் சேவைகளை அரசாங்கம் முற்றிலுமாக தடை செய்தது.
  • சுகாதார மற்றும் பாதுகாப்பு தர நிலைகளை பின்பற்றி இ-கேட்டரிங் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ரயில் சாப்பாடு பிடிக்கவில்லையா; IRCTC உணவு இன்ஸ்பெக்டரிடம் புகார் அளிக்கலாம் title=

ரயிலில் பயணம் செய்யும் போது ரயிலில் கொடுக்கப்பட்ட உணவு பிடிக்கவில்லையா. அதைப் பற்றி நீங்கள் உடனே புகார் அளிக்கலாம். ரயிலில் வழங்கப்படும் உணவின் தரத்தை அறிய சில சிறப்பு ரயில்களில் ரயில்வே, உணவு ஆய்வாளரை நியமித்துள்ளது.

இந்த தகவலை மக்களவையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) அளித்தார். ராஜதானி, சதாப்தி, டுரான்டோ, தேஜாஸ், வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்ட சிறப்பு ரயில்களில்  உணவின் தரத்தை கண்காணிக்க ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். இது தவிர, அஞ்சல் / எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புகாரை எவ்வாறு பதிவு செய்வது

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) மேற்பார்வையாளர்களுக்கு புகார் அளிக்கலாம். ரயில்வேயின் தகவல் தொழில்நுட்ப அமைப்பு மூலம் புகார்கள் பதிவு செய்வதற்கான வழிமுறை தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.  ரயில் உதவி ஹெல்ப்லைன் எண் 139, ட்விட்டர் கணக்கு, CPGRAMS, e-Mail மற்றும் SMS ஆகியவை மூலம் புகார் அளிக்கலாம். இந்த செயல்முறை குறித்த தகவல்கள் இ-டிக்கெட் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி போர்ட்டலில் கொடுக்கப்பட்டுள்ளன. பயணத்தின் போது கேட்டரிங் சேவைகளை மேற்பார்வையிட ஐ.ஆர்.சி.டி.சி மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிப்ரவரியில் ரயில்வே கேட்டரிங் சேவைக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், ரயில்களில் போர்வைகள், பெட்ஷீட்கள் போன்ற பொது பயன்பாட்டு பொருட்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இ-கேட்டரிங் சேவைகளை அரசாங்கம் முற்றிலுமாக தடை செய்தது. ஐ.ஆர்.சி.டி.சியின் இ-கேட்டரிங் சேவையை ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் பெற்றவுடன் தொடங்கலாம்.

நிலைமையை மதிப்பாய்வு செய்த பின்னர், இ-கேட்டரிங் சேவையை மீண்டும் தொடங்க ரயில்வே அனுமதித்துள்ளது. அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு தர நிலைகளையும் பின்பற்றி இ-கேட்டரிங் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரயில்வே பயணிகள் பயணத்தின் போது சிறந்த உணவு மற்றும் பானம் பெறுவது உறுதி செய்யப்படும்.

ALSO READ | மீண்டும் தொடங்குகிறது IRCTC இ-கேட்டரிங் சேவை; உணவை ஆர்டர் செய்வது எப்படி..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News