புதுடெல்லி: இனி வரும் நாட்களில் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும், மட்பாண்டங்களில் தேநீர் கிடைக்கும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள திகாவாடா ரயில் நிலையத்தில் உள்ள திகாவாடா - பாண்டிகுய் ரயில்வே பிரிவில், மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) , இன்று நாட்டில் சுமார் 400 ரயில் நிலையங்களில் மட்பாண்டங்களில், தேநீர் கிடைக்கிறது. ஆனால் இனி வரும் நாட்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் மட்பாண்டங்களில் தேநீர் கிடைக்கும் என்றார்.
பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை ரயில்வே ஊக்குவிக்கிறது. ரயில் நிலையங்களில், ஒரு காலத்தில், மட்பாண்டங்களில் தான் தேநீர் கொடுக்கப்பட்டது. இதனால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. இந்த வகையில், நாட்டின் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மட்பாண்டத்தில் தேநீர் விற்க வேண்டும் என்பது எங்கள் திட்டம். இது லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது என்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் நல்லது என்றும் அவர் கூறினார்.
ALSO READ | டீ குடிக்க பேப்பர் கப் யூஸ் பண்றீங்களா.. அப்ப இதை கண்டிப்பா படிங்க..!!!
நரேந்திர மோடி அரசு 2014 ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளது. காதி மற்றும் கிராமபுற மேம்பாட்டு துறை, ரயில்வேயுடன் இணைந்து இந்த திட்டத்தை ஊக்குவித்து வருவதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய ரயில்வே 2030 க்குள் "பசுமை ரயில்வே" ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது. 2030 க்குள் பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றத்திற்கான (zero carbon emission) இலக்கை ரயில்வே நிர்ணயித்துள்ளது. இந்திய ரயில்வே (Indian Railways) டிசம்பர் 2023 க்குள் அனைத்து அகல பாதை வழிகளையும் மின்மயமாக்குவதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ரயில்வே காற்று மற்றும் சூரிய ஒளியில் மூலம் இயங்கும் ஒரு பெரிய அளவிலான மின் திட்டத்ட்தை கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்திய ரயில்வே 40,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பாதைகளில், மின்மயமாக்கும் பணியை நிறைவு செய்துள்ளது (63% பாதைகளில் மின்மயமாக்கல்). 2009 முதல் 2014 வரை 3,835 கி.மீ. நீளமுள்ளப் பாதையின் மின்மயமாக்கும் பணி நிறைவு செய்யப்பட்டது. இதனுடன் ஒப்பிடும்போது, 2014-2020 ஆம் ஆண்டில் ரயில்வே 18,605 கி.மீ. பாதையில் இந்த பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா (Corona) காலத்தில், 365 கி.மீ முக்கிய ரயில் பாதைகளில் இதற்கான பணிகள் நிறைவடைந்தன.
ALSO READ | ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR