காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் -மத்திய அமைச்சர்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் இம்மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்களிடம் உறுதியளித்துள்ளனர்.

Last Updated : Mar 19, 2018, 06:16 PM IST
காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் -மத்திய அமைச்சர்கள்! title=

காவிரி மேலாண்மை வாரியம் இம்மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்களிடம் உறுதியளித்துள்ளனர்.

கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த வந்த உச்ச நீதிமன்றம், காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என மத்திய அரசுக்கு ஆணையிட்டது. 

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம். தீர்ப்பு வழங்கி 4 வாரங்கள் கடந்த நிலையில் இன்னும் 2 வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் நிலையில், தீர்ப்பு வழங்கி 4 வாரங்கள் கடந்த நிலையில் இன்னும் 2 வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. அதற்கு பதிலாக ஒரு திட்ட குழு அமைப்பு உருவாக்க வேண்டும் என மத்திய அரசு கூறி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அதிமுக எம்.பி-க்கள் தொடர்ந்து11-வது நாளாக பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலதாமதம் செய்யும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Trending News