ராசிபலன்: நட்பு என்ற பெயரில் நம்மை நம்ப வைத்து கழுத்தறுக்கும் நாள்!

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்........

Last Updated : Sep 28, 2019, 07:12 AM IST
ராசிபலன்: நட்பு என்ற பெயரில் நம்மை நம்ப வைத்து கழுத்தறுக்கும் நாள்! title=

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்........

மேஷம்: 
இன்று உங்கள் புகழ்பாடும் சாதனைகளைச் செய்வதற்கு உகந்த நாள். சிறிது சோம்பலை மட்டும் விட்டு விட்டால் வெற்றிகளை அடையலாம். பழைய கடன், கொடுக்கல் வாங்கலில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை எடுப்பீர்கள். எதிலும் இடைத்தரகர் இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்மையைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

ரிஷபம்: 
இன்று வெளிவட்டார பழக்க வழக்கத்தில் உள்ள பெண்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக பழகுதல் அவசியம். இளைய சகோதர-சகோதரிகளிடம் தேவையற்ற இடங்களில் அறிவுரைகள் எதுவும் சொல்ல வேண்டாம். உங்களுக்கு அளிக்கப்படும் பொறுப்புகளை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்: 
இன்று பெரியவர்களின் மனதில் இடம் பிடிப்பீர்கள். அவர்களின் ஆசீர்வாதங்களும் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்குண்டான படிகளை இன்று ஆரம்பிக்கலாம். வீட்டில் சுபநிகழ்ச்சிக்க்குண்டான தேவைகளை திட்டமிடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

கடகம்: 
இன்று கையில் இருக்கும் இருப்பை எதிர்கால தேவைக்கு திட்டமிட்டு சேமிக்க வேண்டிய முறைகளைக் கையாளுவீர்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்து மறையலாம். மூன்றாம் மனிதர் தலையீடு இல்லாமல் உங்கள் பிரச்ச்னைகளை நீங்களே பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்: 
இன்று அதிக உழைப்பில் மனதைச் செலுத்துவீர்கள். தேவையற்ற பிரச்ச்னைகளுக்கு முடிவு தானாகவே தேடி வரும். உடனிருப்பவர்கள் அனைவரும் அன்னியமானவர்கள் போல் தோற்றமளிப்பார்கள். வீண் கோபமும் ஆத்திரமும் வேண்டாம். அவற்றைத் தவிர்த்தல் நலம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி: 
இன்று செய்த தவறை மீண்டும் செய்யாமலிருப்பதற்குண்டான வழிமுறைகளைப் பற்றி யோசனை செய்வீர்கள். பிறருக்கு உதவும் மனப்பாங்கு உங்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் தரலாம். அதனால் உங்கள் விசாலமான மனதிற்கு சிறு சஞ்சலமும் ஏற்படலாம். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்: 
இன்று உஷ்ண உபாதைகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. குடும்பத்தில் நடைபெற இருக்கும் சுபநிகழ்ச்சிகளில் தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவதால் எல்லாமே எளிதாக நிறைவேறும். உங்கள் வேலையை சரியாக செய்தால் வெற்றி தானாகவே வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்: 
இன்று உங்களுடைய மனஉறுதி வெற்றிப்பாதையில் உங்களை அழைத்துச் செல்லும். உங்களுடைய பிரச்சனைகளை மூன்றாம் நபரிடம் விவாதம் செய்ய வேண்டாம். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபமும் உத்யோகத்தில் உயர்வும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 

தனுசு: 
இன்று வேலை செய்யும் இடத்தில் உள்ள ஒரு பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைக்கும். தம்பதிகளிடத்தில் சிறு கருத்து வேறுபாடு தென்பட்டு மறையும். தெய்வம் துணை இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் பீடு நடை போடுவீர்கள். மனதிலும் தலையிலேயும் பாரத்தை சுமக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 

மகரம்: 
இன்று எல்லோரும் நன்றாக இருக்க வேண்டி பிரயாசைப்படும் நாளாக இது இருக்கிறது. அடுத்தவர் மேல் உள்ள கோபத்தை வீட்டு மனிதர்களிடம் காட்டுவதை தவிர்த்தல் நலம். உடன் பணிபுரிவோர்களிடத்தில் அதீத உரிமைகளை எடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கும்பம்: 
இன்று உங்கள் மேல் உண்மையாய் இருக்கிறவர்களின் உணர்வுகளை மதியுங்கள். கடுகு போன்று இருக்கும் பிரச்சனைகளை மலை போல் நினைத்து பயப்பட வேண்டியதில்லை.  மனதையும் உடலையும் பக்குவப்படுத்தி உழைப்பில் கவனத்தைச் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

மீனம்: 
இன்று முன்னோர்களின் ஆசீர்வாதத்தால் உங்களுடைய அனைத்து நற்பலன்களும் சிறப்பாகக் கிடைக்கும். அரசிற்கு எதிரான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அது சார்ந்த மனிதர்களின் சகவாசத்தையும் ஒதுக்குவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 

 

Trending News