டெல்லியில் இன்று தால்கட்டோரா மைதானத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “அரசியலமைப்பை காப்போம்” என்ற பிரசார இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:- ஏழைகளையும், தலித் மக்களையும் மோடி மறந்து விட்டார். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் இதயத்தில் தலித் மக்களுக்கு இடம் இல்லை. மத்திய அரசின் கொள்கையில் தலித் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் இதைப்பற்றி எதுவும் பிரதமர் வாய் திறக்க மறுக்கிறா். நாடாளுமன்றத்த்தில் நான் அவருடன் 15 நிமிடம் நேருக்கு நேர் விவாதிக்க தயார். அவர் வாய் திறப்பாரா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.
ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளித்த பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியது, பயத்தினால் மட்டுமே ராகுல் காந்தி அப்படி பேசுகிறார். அவருக்கு மக்கள் மீதோ, நாட்டின் மீதோ யார் மீதும் நம்பிக்கை இல்லை. காங்கிரஸின் வாரிசு அரசியலை பாதுகாக்க நினைக்கிறார். ஆனால் நாட்டு மக்கள் வாரிசு அரசியலை புறக்கணித்துள்ளதால், கோபத்தின் வெளிப்பாடாக ராகுல்காந்தி இன்று பேசியுள்ளார்.
முழுசா 2 வரி கூட எழுத தெரியாத ராகுல்காந்தி 15 நிமிடம் பிரதமருடன் விவாதம் நடத்துவது பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது எனக் கூறினார்.