உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், நமது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ள துறைகளில் கல்வித் துறையும் ஒன்றாகும். புதிய வழிமுறைகளுக்கு மாணவர்கள் தங்களை பழக்கிக்கொண்டு வருகிறார்கள். தொற்று பரவும் அபாயம் உள்ளதால், மாணவர்கள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்பது தற்போதைக்கு இயலாத ஒன்றாக உள்ளது. ஆகையால் பள்ளிகள் இணைய வழியில் வகுப்புகளை (Online Classe) நடத்தி வருகின்றன.
இந்நிலையில் பத்தாம் (Class 10) பன்னிரெண்டாம் வகுப்பு (Class 12) மாணவர்களுக்கு, ஜூலை 14 ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் பணி தொடங்கும் என தமிழக (Tamil Nadu) அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் பழனிசாமி (Chief Minister K Palanisamy) மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் (book distribution) திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார். அதற்குப் பிறகு, அனைத்து பள்ளிகளிலும் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் பணி தொடங்கும் என அரசு கூறியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மாநிலத்தில் உள்ள பல பள்ளிகள் திறக்க முடியாத நிலையில் உள்ளதால், அநேகமாக அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை தொடக்கிவிட்டன.
இந்த நிலையில், பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இந்த மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் பணியைத் தொடக்கியுள்ளது.
ALSO READ: பாக்., & பங்களாதேஷ் தேசிய கீதத்தை மனப்பாடம் செய்யுமாறு கூறிய ஆசிரியர்..!
பாடப்புத்தகங்களை வழங்கும் திட்டத்தை ஜூலை 14 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் தொடக்கி வைப்பார். இதனையடுத்து அனைத்து பள்ளிகளிலும் புத்தகங்களின் விநியோகம் தொடங்கும்.
புத்தகங்களைப் பெற மாணவர்கள் எப்போது பள்ளிக்கு வர வேண்டும், என்னென்ன எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன போன்ற தகவல்களை பெற்றோர்களுக்கு பள்ளிகள் செல்போனில் அனுப்பி வருகின்றன.