இந்திய அஞ்சல் துறை கிராமின் டக் சேவாக் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. மெரிட் லிஸ்டில் தேர்ந்தெடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என இந்திய அஞ்சல் துறை தெரிவித்திருந்த நிலையில், மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனர். இந்நிலையில், இந்த முடிவுகளை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்கள் இந்தியா போஸ்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான indiapostgdsonline.gov.in என்ற பக்கத்துக்கு சென்று முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் pdf வடிவில் வெளியிடப்பட்டுள்ளது, அதில் தகுதியான விண்ணப்பதாரர்களின் ரோல் எண்கள் உள்ளன. அனைத்து வட்டங்களுக்கும் தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பிராந்தியத்தின் தகுதிப் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து முடிவைச் சரிபார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | Pan - Aadhar Link: மார்ச் கடைசிக்குள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்
இந்தியா போஸ்ட் GDS முடிவுகள் 2023: பதிவிறக்கும் வழிமுறை
* indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
* முகப்புப் பக்கத்தில், அனைத்து வட்டங்களுக்கும் கிடைக்கக்கூடிய ரிசல்ட் பட்டியலைக் கிளிக் செய்யவும்.
* பின்னர், உங்களின் மாநிலத்தில் கிளிக் செய்யவும். புதிய pdf கோப்பு திறக்கும்.
* இப்போது விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர் மற்றும் பிற விவரங்களை அதில் சரிபார்க்கவும்.
* தகுதிப் பட்டியலைப் பதிவிறக்கி, உங்களுடன் ஒரு நகலை வைத்திருக்கவும்.
இந்த பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள், மார்ச் 21, 2023 அன்று அல்லது அதற்கு முன் அவர்களின் பெயர்களுக்கு எதிராகக் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுத் தலைவர் மூலம் தங்களின் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும். பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் அசல் மற்றும் இரண்டு செட் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களை வெரிபிகேஷனுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும் படிக்க | HDFC vs ICICI vs SBI: மூத்த குடிமக்கள் தங்கள் FD-ஐ எங்கு விரைவாக இரட்டிப்பாக்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ