கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் 2020-ஆம் ஆண்டின் UIICL பணியாளர் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
UIICL-ல் காலியாக உள்ள நிர்வாக அலுவலர் பதவிக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.69000 வரை அளிக்கப்படும் என அரசு தரப்பு அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பாணையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது., 2020-ஆம் ஆண்டின் UIICL பணியாளர் தேர்வில் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான வேட்பாளர்கள் www.uiic.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்கள் படி., UIICL ஆட்சேர்ப்பு 2020: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிர்வாக அலுவலர் மற்றும் மருத்துவர் ஸ்கேல் 1 பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. MBBS பட்டதாரிகளுக்கு மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன. ஆன்லைன் மூலம் மே 29 முதல் பணியிடங்களுக்கு தேர்வாளர்கள் விண்ணப்பிக்கலாம், கடைசி தேதி ஜூன் 10 ஆகும். விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
இது தவிர, இந்த காலிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், recruitment/recruitment_registration.jsp என்ற இணைப்பை கிளிக் செய்வதன் மூலமும் எளிதாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்கள் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, https://uiic.co.in/sites/default/files/uploads/recruitment/RecruitmentOf... என்ற இணைப்பை பின் தொடரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
UIICL நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான தேர்வு நடைமுறை, தேர்வாளர்களின் தகுதியின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் எனவும் இந்த அறிவிப்பாணை குறிப்பிடுகிறது.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச தகுதி MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு பல்கலை கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலின் MBBS பட்டத்திற்கு சமமானதாக அங்கீகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் MBBS படிப்பில், இன்டர்ன்ஷிப்பை முடித்திருக்க வேண்டும். பல் மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேத, யுனானி போன்றவை இந்த பதவிக்கு ஏற்ற பாடங்கள் அல்ல.
மொழியாக்கம் : நேசமணி விக்னேஸ்வரன்