மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு..!
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. சுமார் 8 லட்ச மாணவர்கள் எழுதிய இந்த தேர்வுகளின் முடிவுகள் காலையே வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதில் மாணவிகள் 94.8% மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மொத்தமுள்ள 7,127 மேல்நிலைப் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை என்பது 2,120 ஆக உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி அடிப்படையில் இந்த முறை திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றிருக்கிறது.
மாணவ, மாணவிகள் tnresults.nic.in என்ற இணையதளம் மூலமாக தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அது தவிர மாணவர்கள் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் SMS மூலம் அனுப்பி வைக்கப்படும்.
ALSO READ | சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவு 2020: கம்பார்ட்மெண்டில் 8.02% மாணவர்கள் வைப்பு
+2 பொதுத்தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களின் மூலம் காணலாம்....
TN +2 பொது தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி...
- TN பொது தேர்வு முடிவுகளின் அதிகாரப்பூர்வ தளமான tnresults.nic.in இல் பார்வையிடவும்.
- அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கும் TN பொது தேர்வு முடிவு 2020 இணைப்பைக் கிளிக் செய்க.
- மாணவர்கள் ரோல் எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிட்ட பின்பு புதிய பக்கம் திறக்கப்படும்.
- பின்னர் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் முடிவு திரையில் காண்பிக்கப்படும்.
- முடிவை சரிபார்த்து பக்கத்தைப் பதிவிறக்கவும்.
- தேவைப்பட்டால் மாணவர்கள் தேவைக்கு அதன் நகலை பதிவிரகம் செய்து கையில் கைத்து கொள்ளலாம்.
தேர்வுக்கு தகுதி பெற மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் 100 மதிப்பெண்களில் 35 மதிப்பெண்களைப் பெற வேண்டும். மார்ச் 24 முதல் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெடித்ததால் சில தேர்வுகள் பாதிக்கப்பட்டன.
ALSO READ | மெதுவாக இருக்கிறதா சிபிஎஸ்இ வலைத்தளம்? அப்போ இந்த ஆப்பில் முடிவுகளை சரிபார்க்கவும்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (16/07/2020) @tnresults.nic.in இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைபேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். கடந்த மார்ச் பருவத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய தேர்வுகளின் முடிவுகளும் இணையத்தளத்தில் வெளியாகிறது" என தெரிவிக்கபட்டுள்ளது.
மார்ச்/ ஜூன் 11- ஆம் வகுப்பு பருவத்தேர்வுகளில் தேர்ச்சிபெறாத மாணவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு மார்ச்சில் தேர்வு நடந்தது. அதேபோல் கடந்த மார்ச்சில் நடந்த 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 8.50 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பொறியியல் கலந்தாய்வில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கிய நிலையில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.