NEET Exam Result 2020: நீட் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை (NTA )விரைவில் வெளியிட உள்ளது. முடிவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ntaneet.nic.in மற்றும் nta.ac.in என்ற வலைதளங்களில் வெளியிடப்படும்.
புதுடெல்லி: 2020 ஆம் ஆண்டின் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வின் முடிவை தேசிய தேர்வு முகமையான, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி விரைவில் வெளியிடும். முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான ntaneet.nic.in மற்றும் nta.ac.in வலைதளங்களில் வெளியிடப்படும்.
செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 3,843 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இம்முறை நீட் தேர்வில் மொத்தம் 15.97 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். இதி 90% பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.
நீட் 2020 தேர்வின் முடிவை அறிந்து கொள்ள வேட்பாளர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ntaneet.nic.in க்குச் செல்லவும்.
- இதற்குப் பிறகு, நீட் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை சமர்ப்பிக்கவும்.
- நீட் 2020 முடிவு திரையில் காண்பிக்கப்படும்.
- நீங்கள் உங்கள் முடிவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நீட் முடிவுகளை வெளியிடும் முன், தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ), நீட் 2020 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை வெளியிடும். (NEET Official Answer Key 2020). இருப்பினும், எப்போது வெளியாகும் என்பதற்கான அதிகாரபூர்வ தகவல் இல்லை. நீட் 2020 தேர்வில் பங்கேற்றவர்கள், என்.டி.ஏ விடையை வெளியிட்ட பின்னர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து அதனை பதிவிறக்கம் செய்ய முடியும்.
NTA NEET 2020 Answer Key: எவ்வாறு பதிவிறக்குவது
- முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள். அதன் பிறகு லாக் இன் செய்யவும்.
- பின்னர் விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வோர்ட் மூலம் உள்ளீடு செய்யவும்.
- இப்போது நீட் பதிகளுக்கான NEET Official Answer Key 2020 இணைப்பைக் கிளிக் செய்க.
- இதன் மூலம் நீங்கள் உங்கள் நீட் 2020 பதிலைப் பதிவிறக்க முடியும்
ALSO READ | கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குவியும் விண்ணப்பம்; எண்ணிக்கை 70,000-த்தை தாண்டியது..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR