கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குவியும் விண்ணப்பம்; எண்ணிக்கை 70,000-த்தை தாண்டியது..!!!

தனியார் பள்ளிகளில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இருக்கும் மொத்த இடங்களில்,  காலியாக உள்ள இடங்கள் எத்தனை என்ற விவரத்தை பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 21, 2020, 11:49 AM IST
கல்வி உரிமை சட்டத்தின் கீழ்  குவியும் விண்ணப்பம்; எண்ணிக்கை 70,000-த்தை தாண்டியது..!!!
Photo: Zee

CHENNAI: சிறிது நாட்களுக்கு முன் கட்டாயக் கல்வி உரிமை சட்டடத்தின் கீழ், 25% சதவிகித இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற சட்டத்தின் கீழ்,  எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என கேட்டு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.

மேலும் அதில் காலியாக இருக்கும் இடங்களை வேறு மாணவர்களைக் கொண்டு நிரப்பக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தனியார் பள்ளிகளில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இருக்கும் மொத்த இடங்களில்,  காலியாக உள்ள இடங்கள் எத்தனை என்ற விவரத்தை பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எல்.கே.ஜி மற்றும் முதலாம் வகுப்பு போன்ற ஆரம்ப பள்ளிகளில் அனைத்து தனியார்,  சுயநிதிப் பள்ளிகளில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பிந்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் 2013-14 முதல் மாநிலத்தில் கல்வி உரிமை சட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், இதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, மாநில அரசு 2017-18 முதல், மாணவர் சேர்க்கையை, ஆன்லைனில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதில்  ஆன்லைன் சேர்க்கை மே 3 ஆம் தேதி தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கோவிட் -19 தொற்று நிலைமை காரணமாக, ஆன்லைன் சேர்க்கை ஆகஸ்ட் 27 அன்று தான் தொடங்கியது.

20 நாட்களில் 70,000 திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்றும், இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என எதிர் பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | Online Games-க்கு தாயின் Rs.90,000-ஐ செலவழித்த சிறுவன்! தந்தை புகட்டிய வினோத பாடம்!!

2019-20 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 76,927 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் 64,385 ஐ விட அதிகமாக இருந்தது, 2020-2021 ஆம் ஆண்டில், கொரோனா நெருக்கடி பலரின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ள நிலையில், மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரி கூறினார்.

COVID-19 லாக்டவுனால்  ஏற்பட்ட நெருக்கடி தான் இந்தஃ அளவிற்கு விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் எனவும் கூறப்படுகிறது. அரசு இதுவரை கலவி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்காக, தனியார் பள்ளிகளுக்கு ரூ.644.69 கோடியை செலுத்தியுள்ளதாகவும், 2013 முதல் 2019 வரை 5,60,829 குழந்தைகள் கலவி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | இன்று முதல் இந்த மாநிலங்களில் பள்ளி 'மணி' ஒலிக்கும்... பெற்றோர் கவனத்திற்கு!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR