என்னை அதிமுகவில் இருந்து நீக்க வீரமணி திட்டம்- நிலோபர் கபில் புகார்

அமைச்சர் வீரமணி எனக்கும் நிறைய தொந்தரவு தந்துள்ளார் என்று நிலோபர் கபில் புகார் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 14, 2021, 07:28 AM IST
என்னை அதிமுகவில் இருந்து நீக்க வீரமணி திட்டம்- நிலோபர் கபில் புகார் title=

தமிழக சட்டமன்றத் தேர்தல் (Tamil Nadu Election Assembly 2021அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் பரபரப்பாகியுள்ளன. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும். இதற்கான விருப்ப மனு தாக்கல் செய்து தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த சில முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் சில இடங்களில் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

கடந்த 10ஆம் தேதி அதிமுக (AIADMKஅதன் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் 171 வேட்பாளர்களின் பெயர்கள் இருந்தன. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, தற்போது வரை மூன்று தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிட்டது. 

ALSO READ | Election 2021: "வெற்றிக் கொடி ஏந்தி" தமிழகத்தில் அமித் ஷா தேர்தல் பிரசாரம்

அதன்படி, ஆம்பூர் தொகுதியில் அக்கட்சியின் நகரமன்ற துணைத் தலைவராக இருந்த நஜர்முகம்மத், ஜோலார்பேட்டை தொகுதியில், 2011 முதல் இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ள வீரமணி மற்றும் வாணியம்பாடி தொகுதியில், அக்கட்சியின் ஆலங்காயம் ஒன்றியச் செயலாளராக உள்ள செந்தில்குமார் ஆகியோருக்கு இடங்கள் வழங்கப்பட்டிருந்தது. இதில் நிலோபர் கபிலுக்கு (Nilofer Kapil) எந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இந்நிலையில் வாய்ப்பு வழங்கப்படாத நிலோபர் கபில் நேற்று (12.03.2021) சென்னையிலிருந்து வாணியம்பாடி திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அமைச்சர் வீரமணி தொல்லையால் அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த ஜெயந்தி, பார்த்திபன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் தினகரன் (TTV Dhinakaranகட்சிக்கு சென்றுவிட்டனர். எனக்கும் அவர் நிறைய தொந்தரவு தந்துள்ளார். 

என்னை அதிமுக இல் இருந்து நீக்க கே.சி.வீரமணி (Veeramani) முயற்சி செய்து வருகிறார். 10 கட்சிகளுக்கு என்னை தொடர்புகொண்டு அழைத்தார்கள். அந்த தவறை ஒரு போதும் நான் செய்ய மாட்டேன். ஜெயலலிதா கட்சிக்காக விசுவாசமாக இருப்பேன், இரட்டை இலைக்கு விசுவாசமாக இருப்பேன்.

இதுவரைக்கும் என் கட்சிக்காக, நான் ஒரு அமைச்சராக இருப்பதால் ஜெயலலிதாவுடைய மரியாதைக்காகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மரியாதைக்காகவும் நான் யாரிடமும் புகார் செய்ததே இல்லை. என்று கண்ணீர் விட்டு அழுதார். 

ALSO READ | TN election 2021: பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News