யுகாதி பண்டிகையினை மகிழ்ச்சி பொங்க கொண்டாட வேண்டும் என தமிழக ஆளுநர் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்!
கன்னடா மற்றும் தொலுங்கு மொழி பேசும் மக்களின் புதுவருட பிறப்பு பண்டிகையான யுகாதி பண்டிகை நாளை (மார்ச்,18) அன்று விமர்சையாக கொண்டாடப் படுகின்றது. புதுவருடம் ஆரம்பம் என்பதன் அர்த்தமாகவே கொண்டு யுக(புது) ஆதி(ஆரம்பம்) என்பதை ஒன்றினைத்து யுகாதி என அழைக்கின்றோம்.
இந்துக்களின் கலாச்சாரத்தினை போற்றும் விதமாகவும் இந்த பண்டிகை கோளாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இப்படிகையை கொண்டாட உள்ள கன்னட மற்றும் தெலுங்கு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...
"யுகாதி பண்டிகையைக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
யுகாதி பண்டிகையை மகிழ்ச்சிகரமாக, பாரம்பரியமாகக் கொண்டாடும் வேளையில், நாம் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்காக ஒருங்கிணையது செயல்படவேண்டுமென்றும், நாம் செய்யும் முயற்சிகள் அனைத்தும் நம் நாட்டின் அமைதிக்காகவும், வலிமைக்காகவும், ஒளிமயமான வளர்ச்சிக்காகவும் உதவவேண்டுமென்றும் விரும்புகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்!