ரஜினியுடன் மீண்டும் படம்? அந்த ஆதங்கம் இன்னும் இருக்கிறது - இசையமைப்பாளர் தேவா!

புஷ்பா 2 பட விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக யார் மீது யாரும் குற்றம் சொல்ல முடியாது என இசையமைப்பாளர் தேவா பேட்டி அளித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Dec 23, 2024, 02:40 PM IST
  • ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம்.
  • அந்த ஆதங்கமும் எனக்கு இருக்கிறது.
  • இசையமைப்பாளர் தேவா பேட்டி.
ரஜினியுடன் மீண்டும் படம்? அந்த ஆதங்கம் இன்னும் இருக்கிறது - இசையமைப்பாளர் தேவா! title=

மதுரையில் இசை அமைப்பாளர் தேவா Live in concert நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி ஒத்தக்கடை அருகே உள்ள வேலம்மாள் மைதானத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பொறியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் தேவா கூறுகையில், மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது எனது பாடல் "வராரு வராரு அழகர் வாராரு என்ற பாடல்" ஒலித்துக் கொண்டே இருக்கும், அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அதனை நான் முதல்முறையாக மதுரை மண்ணில் பாட இருக்கிறேன். இதற்கான வாய்ப்பை கேப்டன் விஜயகாந்த் எனக்கு அளித்தார் அவருக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

மேலும் படிக்க | Allu Arjun Arrest : நடிகர் அல்லு அர்ஜுன் கைது! என்ன காரணம்?

இந்த இசைக் கச்சேரி 60 பேர் கொண்ட இசைக் குழுவினருடன் இணைந்து நடத்த உள்ளேன். 5 முதல் 6 மணி நேரம் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. காலம் கடந்து எனது இசையும், ராஜா இசையும் இருப்பதற்கு மிகப்பெரிய பாக்கியம் செய்திருக்கின்றேன். எனக்கு அனிருத் ரொம்ப பிடிக்கு,ம் அவர் லேட்டஸ்ட் ஆக ஸ்பீடாக இருக்கிறார். எனக்கு நடிக்க நிறைய படங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது ,பண்ண விருப்பமில்லை. இசை வொர்க் டைட்டாக இருப்பதால் நடிக்க விரும்பவில்லை. தற்போது இருக்கக்கூடிய இசையமைப்பாளர்களுக்கு இசை பிடிக்கவில்லை என்றால் தலைமுறை இடைவெளி இருக்கிறது என்று தான் அர்த்தம். எனக்கு அனைவரின் இசையும் பிடிக்கத்தான் செய்கிறது.

கந்த சஷ்டி கவசம் பாடல் சூரியன் படத்தில் 18 வயதில் பாடலைப் போல சேர்த்து இசையமைத்தேன், கதைக்கு ஏற்ற போது சேர்க்கப்படுகிறது. ஆனால் அதை காப்பி அடித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஹைதராபாத்தில் புஸ்பா-2 படத்தின் போது அல்லு அர்ஜூனை காண சென்ற போது கூட்ட நெரிசலில் பெண் மற்றும் சிறுமி உயிர் இழந்த விவகாரத்தில் நடிகரின் மீது நடவடிக்கை எடுத்திருப்பது துரதஷ்டவசமானது, அது குறித்து தெரியாது என்றார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த விதமான அவமதிப்பு நடைபெறவில்லை, அதனை அவரும் கூறியிருக்கிறார். அனைத்து மரியாதையும் கொடுக்கப்பட்டதை நான் தொலைக்காட்சி வாயிலாக பார்த்தேன்.

இப்போது  உள்ள இளம் இசை அமைப்பாளர்கள் நன்றாக இசை அமைக்கின்றார்கள். அவர்களுக்கு கூறுவதற்கு எதுவும் கிடையாது.  ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இளம் இசையமைப்பாளர்கள் பணத்தை சேமித்து வைத்து வரும் காலத்திற்கு தேவையவற்றை சேமிக்க வேண்டும். எனது பாடல் 35 ஆண்டுகளுக்கு பிறகும் தற்பொழுதும் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவது எனக்கு கிடைத்த பாக்கியமாக நான் கருதுகிறேன். மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விருப்பப்படுகிறேன். அந்த ஆதங்கமும் எனக்கு இருக்கிறது அதற்காக காத்திருக்கிறேன். இசைமையைப்பாளர்கள் நடிகராக மாறுவது அவர்களின் தனித்திறமை என கூறினார்.

மேலும் படிக்க | புஷ்பா 2 படம் ஓடிடியில் ரிலீஸாவது எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News