சென்னை அரசு மருத்துவமனையில் 10 வகுப்பு படித்தவருக்கு வேலை!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் பணிப்புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Last Updated : Mar 17, 2018, 01:57 PM IST
சென்னை அரசு மருத்துவமனையில் 10 வகுப்பு படித்தவருக்கு வேலை! title=

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் பணிப்புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை பார்க் டவுன், EVR பெரியார் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் பணிப்புரிய 10 வகுப்பு பயின்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவது...

  • மொத்த பணியிடங்கள் - 2 (ஆதி திராவிடர் 1, பழங்குடி இனத்தவர் 1)
  • கல்விதகுதி - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொலைபேசி இயக்குபவர் பயிற்சி
  • வயது - 18-35
  • ஊதியம் - அடிப்படை ஊதியம் 19500/-
  • விண்ணப்பங்கள் வழங்கப்படும் தேதி - 19.03.18 முதல் 22.03.18 வரை (காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணி வரை)
  • கடைசி நாள் - 27.03.18 மாலை 5 மணி

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சென்னை பார்க் டவுன், EVR பெரியார் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் அடுக்குமாடி கட்டிடம் 1-ல் உள்ள அறை எண் 115C-ல் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

Trending News