bananas benefits Tamil | வாழைப்பழம் ஒரு சுவையான பழம் மட்டுமல்ல, அதற்கு சூப்பர்ஃபுட் அந்தஸ்தும் இருக்கு. இந்த பழம் நம் உடலுக்கு பல வழிகளில் நன்மை கொடுக்கக்கூடியது. ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவம் என இரண்டு வகையான மருத்துத்திலும் வாழைப்பழத்தின் பலன்கள் அடிக்கோடிட்டு சுட்டிக்காட்டப்படுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் இதய ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது.
ஆனால் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் பல தீவிர பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? பழுத்த வாழைப்பழத்தை 40-45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம் என்றும் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவர் ராபின் சர்மா வாழைப்பழத்தின் சில நன்மைகளைப் பற்றி கூறியுள்ளார். 3 முக்கிய உடல்நலப் பிரச்சினைகளை தீர்க்கும் என்றும் கூறியுள்ளார். அவை என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | எச்சரிக்கை... இந்த உணவுகளுடன் லெமன் டீ எடுத்துக்காதீங்க.. ஆரோக்கியத்திற்கு கேடு
எடை அதிகரிக்கும்
குறைவான எடை இருக்கிறது என கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் அவசியம் வாழைப் பழம் சாப்பிட வேண்டும். காலை உணவாக சிறிது நெய் மற்றும் நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்து இரண்டு பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடுங்கள். 40-45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். எடை குறைவாக இருப்பதும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இது பலவீனம், மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது. இந்த உணவு முறை கடைபிடித்தால் சீக்கிரம் உங்களின் எடை கூடும்.
புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனை
அடிக்கடி வாய் புண்கள் அல்லது அடிக்கடி வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு வாழைப்பழத்தை தயிரில் கலந்து சாப்பிட வேண்டும். மருத்துவர் ராபின் சர்மா அறிவுறுத்தலின்படி, இந்த பிரச்சனையை வாழைப்பழம் தீர்க்கும் என்கிறார். வாழைப்பழத்தை தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரண்டாவது நாளில் இருந்தே இதனுடைய மாற்றத்தை காண்பீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளைப்படுதல் பிரச்சனை
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் மூலம் நிவாரணம் பெறலாம். பலவீனம் காரணமாக லுகோரோயா (வெள்ளை படுதல்) பிரச்சனையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு வாழைப்பழம் நன்மை தரும். பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரையை லைட்டாக தொட்டுக் கொண்டு தினமும் சாப்பிட்டு வர உடல் பலவீனம் நீங்கி வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உங்கள் குடல் மோசமாக உள்ளது என்பதை காட்டும் முக்கியமான 7 அறிகுறிகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ