நெல்லிக்காய் ஜூஸ்: ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் அற்புதமான காயான நெல்லிக்காய், ஆயுர்வேதத்தில் கிட்டத்தட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள அதிகாலை வெறும் வயிற்றில் குடிப்பதனால், உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் நீங்கி, உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குளிர்காலத்தில் நெல்லிக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், பருவகால நோய்களில் இருந்து தப்பிக்கலாம். இந்நிலையில், நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளை விரிவாக அறிந்து கொள்ளலாம்
மூளை ஆரோக்கியம்
ஆம்லா என்னும் நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள், மன அழுத்தத்தை போக்கி மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, நினைவாற்றலை மேம்படுத்துவதுடன், மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸ், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த பானம்.
டீடாக்ஸ் பானம்
சிறந்த டீடாக்ஸ் பானமாக செயல்படும் நெல்லிக்காய் ஜூஸ், உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது. இதன் காரணமாக உடலில் சேரும் நச்சுக்கள் அனைத்தும் மலம் மற்றும் சிறுநீர் மூலம் வெளியேறும்.
இளமை
முடி மற்றும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க நெல்லிக்காய் ஜூஸ் உதவும். தலைமுடி அதிகமாக உதிர்ந்தால் அல்லது இளநரை, போஒன்றவற்றுக்கு ஆம்லா ஜூஸ் சிறந்தது. இது முடியின் வேர்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை அளித்து, முடியை பலப்படுத்துகிறது.
எடை இழப்பு பானம்
நெல்லிக்காய் ஜூஸ் மிகச்சிறந்த வெயிட் லாஸ் ட்ரிங்க். இதனை உட்கொள்வதால் உடல் எடை வேகமாக குறைகிறது. கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்ட நெல்லிக்காய் ஜூஸ் உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் கலோரிகள் குறைவாக உள்ளது. கூடுதலாக, தூக்கமின்மையை போக்குகிறது. நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது குறிப்பாக வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
இதய ஆரோக்கியம்
மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்னும் கெட்ட கொழுப்பை கரைக்கும் ஆற்றல் நெல்லிக்காய் ஜூஸுக்கு உண்டு. தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவது மாரடைப்பு பக்கவாத அபாயத்தை பெரிமளவு குறைக்கும்.
மேலும் படிக்க | உடல் பருமன் உடனே குறைய கருப்பு மிளகை இப்படி சாப்பிடுங்க: ஈசியா ஒல்லியாகலாம்
கல்லீரல் ஆரோக்கியம்
நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பதால், கொழுப்பு கல்லீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதோடு, கல்லீரலில் சேரும் நச்சுக்கள் அனைத்தும் நீங்கும். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட, நெல்லிக்காய் ஜூஸ் அருமருந்தாக இருக்கும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.
இரத்த சர்க்கரை அளவு
நீரிழிவு நோயாளிகள் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க, காலையில் வெறும் வயிற்றில் காபி டீ குடிப்பதற்கு பதிலாக, நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவது சிறந்த தேர்வாக இருக்கும். இதனை குடிப்பதால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
செரிமான ஆரோக்கியம்
நெல்லிக்காய் ஜூஸ், இரைப்பை ஆரோக்கியத்திற்கான சுரப்பைத் தூண்டி, உடல் உணவிலிருந்து ஊட்டச்சத்து உறிஞ்சும் திறனை மேம்படுத்துகிறது. இதனால் அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக் கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | நாள் முழுவதும் எனர்ஜி லெவல் குறையாம இருக்க... சில சூப்பர் ஜூஸ்கள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ