மல்லிகைப்பூ தலையில் சூட மட்டுமின்றி, இதன் இலை, மலர் என அனைத்தும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. மல்லிகை மலர்கள் பலவகை இருந்தாலும் அனைத்து மலர்களிலும் ஏரத்தாள ஒரே குணமே காணப்படுகிறது. இப்போது மல்லிகையின் மகத்தான பயன்களை பற்றி காண்போம்.
> மல்லிகையின் மருத்துவ குணங்கள் பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் லினோல், பென்சோயிக் அசிடேட், இண்டோல், ஜஸ்மோன், சாலிசிலிக் அமிலம், ஆல்கலாய்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன. இந்த இயற்கை மூலிகை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நம்மை நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.
> மல்லிகை பூ டீ மிகவும் பிரபலமானது. இதை குடிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது. இது மனதை தெளிவுபடுத்தி மனதை அமைதியாக்குகிறது.
> மல்லிகைப்பூ வாய் பிரச்சனைகளை போக்கும். மல்லிகைப்பூவின் இலைகள் வாயில் உண்டாகும் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. அது மட்டுமின்றி, தலைவலி, உடலில் உண்டாகும் அலர்ஜியை போக்குகிறது.
> மல்லிகைப்பூ கீறல்கள் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. இதனை அரோமா தெரபி மூலம் எடுத்துக்கொள்ளும் போது இதன் வாசனை மனதை அமைதிப்படுத்துகிறது. மனதில் நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கிறது.
> மல்லிகைப்பூ டீயை தினமும் குடித்து வந்தால், கார்டிவாஸ்குலர் இருதய நோய் பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.