பாகற்காய் கசப்பில் இருக்கும் அதலைக்காய் கல்லீரல் பாதிப்பை குறைக்கும்

பாகற்காய் கசப்பில் இருக்கும் அதலைக்காய் கல்லீரல் பாதிப்பை குறைக்கும் ஆற்றலையும், சளி, அஜீரணம் மற்றும் மூட்டுவலிக்கு நிவாரணத்தையும் கொடுக்கும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 29, 2023, 12:56 PM IST
  • பாகற்காய் கசப்பில் இருக்கும் அதலைக்காய்
  • கல்லீரல் பாதிப்பை எல்லாம் தடுக்கும்
  • குடல் புழுக்களை வெளியேற்றும் ஆற்றல் உள்ளது
பாகற்காய் கசப்பில் இருக்கும் அதலைக்காய் கல்லீரல் பாதிப்பை குறைக்கும்  title=

அதலைக்காய் மழைக் காலத்தில் மட்டுமே கிடைக்கும். தரையில் படரும் கொடி வகையாகும். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் அதலைக்காய் காணப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விருதுநகர், சாத்தூர், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் சில இடங்களில் கிடைக்கிறது. இப்பகுதிகள் கரிசல் மண் நிறைந்தவை என்பதால் எள், சோளம், மக்காசோளம் போன்ற பயிர்களுடன் மருத்துவ குணம் கொண்ட அபூர்வ அதலைக்காய் விளைகிறது. 

மேலும் படிக்க | வெங்காய டீ குடித்திருக்கிறீர்களா? செய்முறை மற்றும் பலன்கள் இதோ

பாகற்காய்களைப் போலவே கசப்பான சுவை கொண்ட அதலைக்காய்கள் உடல்நலத்திற்கு உதவும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. இதில் கிளைக்கோசைடுகள், மொமார்டிகோசைடுகள் மற்றும் இன்சுலினுக்கு இணையான பண் புரதங்கள் பெருமளவு காணப்படுகின்றன. வெகுசில காய்கறி கடைகளில் மட்டுமே சல்லியாகக் கிடைத்து வந்த அதலைக்காய், தற்போது சந்தையில் ஒரு கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மதுரை, சென்னை உட்பட பிற மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான காய்கறி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. 

பாகற்காயின் மறுவடிவம்

அதலைக்காயில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, புரதம் மற்றும் தாது உப்புக்கள் மிகுந்த அளவில் உள்ளன. 100கிராம் அதலைக்காயில் 6.42 கி. நார்ச்சத்து, 72 மி.கி. சோடியம் மற்றும் 290 மி.கி. உயிர்ச்சத்து சி உள்ளது. மேலும், இந்த தாது உப்புகள் மற்றும் விட்டமின்களின் அளவு பாகற்காயுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகமாகும். ஆரோக்கியமான எலும்பு மற்றும் பல் வளர்ச்சி, இதயத்துடிப்பு, நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் மற்றும் இரத்தம் உறைதல் ஆகியவற்றிற்கும் அதலைக்காய் இன்றியமையாதது. மேலும், இதில் உள்ள உயிர்ச்சத்துகள் மற்றும் தாது உப்புகளை பாகற்காயுடன் ஒப்பிடுவதற்காக பாகற்காயில் உள்ள சத்துகள் ஒப்பீடாக எடுத்துக் கொள்ள முடியும். ஏனெனில், அதலைக்காயை கிட்டத்தட்ட பாகற்காய் என்று சொல்லாம்.

மருத்துவப் பலன்கள்

அதலைக்காய் நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தவும் குடற்புழுக்களுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது. வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதை சாப்பிட வயிற்றில் நுண்புழுக்கள், குடற்கிருமிகள் ஆகியன நீங்கும். சர்க்கரை அளவு மற்றும் கொழுப்புச் சத்து குறையும். நாட்டப்பட்ட புண்கள் ஆறும். எனவே, இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும்.  கசப்புத்தன்மையுடைய அதலைக்காய் ஜீரணத்தை அதிகப்படுத்தி, உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் நுண் கிருமிகளை வெளியேற்றி, உடல் எரிச்சலைத் தணித்து, அதிகரித்த ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

அது மட்டுமின்றி சளி, ஜீரணம், மூட்டுவலி போன்ற நாட்டப்பட்ட உணவுப் பாதைகளிலுள்ள அழுக்குகளையும் கழிவாக வெளியேறும் தன்மை உடையது. கார்பன் டெட்ரா குளோரைடினாலும் பாரசிட்டாமாலினாலும் விளையும் கல்லீரல் பாதிப்பை இது தடுக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதலைக்காயின் இலைகளில் இருந்து பெறப்பட்ட மருந்து யானைக்கால் நோயை குணமாக்கும். கியூலெக்சு வகை கொசுக்களை எதிர்க்க வல்லது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள்... இவற்றை தொடவே கூடாது!! ஜாக்கிரதை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News