உடற்பயிற்சி செஞ்சா கூட மாரடைப்பு வருமா? என்ன காரணம்?

அதீத உடற்பயிற்சியும் மாரடைப்புக்கு வழிவகுக்கிறது என்பது கவலையாக இருக்கலாம். ஆனால், அது குறித்து தெரிந்து வைத்துக் கொள்வது என்பது அவசியம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 30, 2023, 02:12 PM IST
உடற்பயிற்சி செஞ்சா கூட மாரடைப்பு வருமா? என்ன காரணம்? title=

அதீத உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறும் நிலையில், அதீத உடற்பயிற்சியும் ஆபத்தானது என்கிறனர் நிபுணர்கள். ஜிம் செல்ல தொடங்கும் பலரும் தொடக்கத்திலேயே அதீத உடற்பயிற்சி செய்கின்றனர். இது உடலுக்கு நல்லதல்ல. மிதமான பயிற்சி பாதுகாப்பானது.  அதனை அதீதமாக செய்யும்போது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

மாரடைப்பு

அதீத உடற்பயிற்சியால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில்  0.001-ல் இருந்த இறப்பு விகிதம் இப்போது 0.002%-ஆக அதிகரித்திருக்கிறது. இவற்றுக்கு என்ன காரணம் என ஆராயும்போது, அதீத உடற்பயிற்சி என்பது தெரியவந்திருக்கிறது. அதிக உடற்பயிற்சி செய்யும்போது இதயத்திற்கு ரத்தத்தை பம்ப் செய்வதை கடினமாக்குகிறது மற்றும் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும். இதனால் ஆண்டுக்கு 80% இறப்புகள் ஏற்படுகின்றன. 

மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் பருமனை சட்டென்று குறைக்க உதவும் ‘மேஜிக்’ மசாலாக்கள்!

குளிர்காலம் ஆபத்து

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற சிக்கல்களை கொண்ட இதய நோயாளிகள் தீவிரமான உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படும். இவர்கள் சிக்கல்களை அறியாமல் அதிக தீவிரம் கொண்ட பயிற்சிகளை மேற்கொண்டனர். ஒரு நபர் அதிகாலை அல்லது மாலை நேரத்தில் தீவிர உடற்பயிற்சி செய்யும் போது, குறிப்பாக குளிர்காலத்தில் இந்த சிக்கல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. குளிர் காலத்தில் தமனிகள் சுருங்குவதால் உடலின் வெப்பநிலையை பராமரிக்க இதயம் கூடுதலாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

அதிகப்படியான உடல் செயல்பாடு

WHO கூற்றுப்படி, வாரத்திற்கு சுமார் 150-300 நிமிடங்கள் பிசிக்கல் ஆக்டிவிட்டியில் ஈடுபட வேண்டும். ஜிம்களில் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்யும்போது இதய துடிப்பு அதிகபட்சமாக 50 முதல் 60% வரை மட்டுமே செய்ய வேண்டும். ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் போது டிஹைட்ரேஷன், எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகள், அதிக எடை இழப்பு, ஹைபோடென்ஷன், குறைந்த ரத்த சர்க்கரை அளவுகள், தசைப்பிடிப்பு மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் ஆகியவற்றைத் தடுக்க கவனம் செலுத்துவது முக்கியமானது.

என்ன செய்ய வேண்டும்?

ஒரு தனி நபர் உடற்பயிற்சி திட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நிபுணர்களிடம் சென்று தங்களுக்கு இதய ஆபத்து இருக்கிறதா என ஸ்கிரீனிங் செய்து கொள்ள வேண்டும். இந்த டெஸ்ட் பிஎம்ஐ, உயரம், எடை, இடுப்பு சுற்றளவு, துடிப்பு விகிதம், ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் செறிவு, ரத்த சர்க்கரை மற்றும் ஹீமோகுளோபின் மதிப்பீட்டை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். எப்போது ஒர்க்கவுட்ஸ் செய்தாலும் வார்ம்-அப் உடன் தொடங்கி, உச்ச செயல்திறனை அடைந்தவுடன், சோர்வு அடையும் வரை வொர்க்அவுட்டை தொடரலாம். பின் மெதுவாக சிறிது நேரம் ஓய்வெடுக்கவும். 

மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஒழித்துக் கட்டும் ‘சில’ எளிய வீட்டு வைத்தியங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News