கோவிட் -19 அதிகம் பாதிக்காத blood group எந்த குரூப்? அது உங்களுடையதா?

கொரோனா வைரஸ் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கை முறையையும் பழக்கத்தையும் மாற்றிவிட்டது. கொரோனா வைரஸ் மற்றும் கோவிட் தொற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளும் அதிகரித்திருக்கின்றன. ஆராய்ச்சிகளின் முடிவில் அடிப்படையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மாறிவரும் அறிகுறிகளை விஞ்ஞானிகள் அவ்வப்போது வழங்கி, எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கச் செய்கின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2020, 07:55 PM IST
கோவிட் -19 அதிகம் பாதிக்காத blood group எந்த குரூப்? அது உங்களுடையதா? title=

கொரோனா வைரஸ் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கை முறையையும் பழக்கத்தையும் மாற்றிவிட்டது. கொரோனா வைரஸ் மற்றும் கோவிட் தொற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளும் அதிகரித்திருக்கின்றன. ஆராய்ச்சிகளின் முடிவில் அடிப்படையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மாறிவரும் அறிகுறிகளை விஞ்ஞானிகள் அவ்வப்போது வழங்கி, எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கச் செய்கின்றனர்.
 
கொரோனா வைரஸ் தொடர்பான இரண்டு ஆராய்ச்சிகள் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரு நபரின் ரத்த வகை அதாவது பிளட் குரூப் (blood group) மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நடத்தப்பட்ட இரண்டு சுயாதீன ஆய்வுகளின்படி, O blood group மனிதர்களை கொரோனா அதிகம் பாதிப்பதில்லை என்று தெரிய வந்துள்ளது. ஆனால்,   A மற்றும் AB blood group உள்ளவர்களுக்கு சற்று ஆபத்து அதிகம் தான் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி | வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியா?

ஓடென்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனை (Odense University Hospital) மற்றும் தெற்கு டென்மார்க் பல்கலைக்கழக (University of Southern Denmark) ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்தியது.

கொரோனா வைரஸ் பாதித்த 4,73,000க்கும் மேற்பட்ட மக்களின் சுகாதார பதிவேட்டில் (health registry data) இருந்து விஞ்ஞானிகள் தரவுகளை சேகரித்தனர்.

ரத்த வகைகள் கொரோனா பாதிப்பில் முக்கிய பங்காற்றுகிறது என ஓடென்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையின் டாக்டர் டொர்பன் பாரிங்டன் (Dr Torben Barington) கூறினார். இது குறித்து விளக்கமாக கூறும் அவர், "டென்மார்க் ஒரு சிறிய, இனரீதியாக ஒரே மாதிரியான மக்களைக் கொண்ட நாடு. பொது சுகாதார அமைப்பு மற்றும் ஆய்வக தரவுகளுக்கான மைய பதிவேட்டில் இருந்து நாங்கள் தரவுகளை எடுத்துள்ளோம். எனவே மக்கள் தொகை அடிப்படையிலான இந்த தரவுகளை பயன்படுத்திய எங்கள் கண்டுபிடிப்பு, வலுவான அடித்தளத்தை கொண்டது” என்று தெரிவிக்கிறார்.

தொடர்புடைய செய்தி | COVID-19க்கு சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே கொடுக்கும் ஆராய்ச்சி விரைவில் தொடங்கும்

இந்த தரவுகளின்படி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் அனுமானங்களின்படி, “O” blood group கொண்டவர்கள், கொரோனா வைரசால் குறைவான பாதிப்பை எதிர்கொள்கிறார்கள், அதேசமயம் A மற்றும் AB, blood group உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கும் ஆபத்து அதிகம் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இரண்டாவது ஆராய்ச்சி கனடாவின் வான்கூவரில், சுமார் 95 பேரை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அனைவரும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள். இந்த ஆய்வில் கிடைத்த சுவாரஸ்யமான முடிவு என்ன தெரியுமா? ‘O’ blood group நோயாளிகளுடன் ‘A’ மற்றும் ‘AB’ blood group நோயாளிகளை ஒப்பிட்டால், ‘A’ மற்றும் ‘AB’ blood group நோயாளிகளுக்கு   அதிக அளவில் செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது. ஐ.சி.யுவில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட தரவுகளும் இந்த அவதானிப்பை உறுதி செய்கின்றன.  
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முன்னணி மருத்துவர் டாக்டர் மைபிந்தர் செகோன் இவ்வாறு கூறுகிறார்: “தொற்றுநோயைத் தொடர்ந்து நாம் அவதானித்து பார்ப்பது முக்கியமானது. தற்போது கோவிட்-19 இன் கடுமையான பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பல்வேறு தரப்பினர் இருக்கின்றனர். நீண்ட கால தாக்கம் கொண்ட முறைகளை கண்டறிவது தான் நமது ஆராய்ச்சிகளின் நோக்கம். அதை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.”

Read Also | அதிர்ச்சி சம்பவம்.. மனைவியை 1 ½ வருட காலம் பாத்ரூமில் அடைத்து வைத்திருந்த கணவன்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News